மஹிந்திராவின் செயலால் ஒட்டுமொத்த நாடே பெருமை படுது! மார்க்கெட்டிங் எப்படி பண்ணனும்னு இவங்ககிட்ட கத்துக்கணும்!

மஹிந்திரா (Mahindra) குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா டிராக்டர்கள் (Tractors) நிறுவனம், இந்தக் குடியரசு தினத்தை முன்னிட்டு தனது புதிய லிமிடெட் எடிஷன் (Limited Edition) டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மூவண்ணக் கொடியின் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிறப்பு பதிப்பு டிராக்டர்கள், நாட்டின் ஒற்றுமை, நெகிழ்ச்சி மற்றும் விவசாய வலிமையை பறைசாற்றும் விதமான அமைந்துள்ளன.

மேலும், இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவர்களின் பங்களிப்பை இது பெருமையுடன் போற்றுகிறது. வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா யூவோ டெக்+ 585 டிஐ 4-வீல்-டிரைவ் லிமிடெட் எடிஷன் (Yuvo Tech+ 585 DI 4WD Limited‑Edition) டிராக்டர்கள் மெட்டாலிக் ஆரஞ்சு, எவரெஸ்ட் வெள்ளை மற்றும் மெட்டாலிக் பச்சை ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் மெட்டாலிக் பச்சை வண்ணத்தில் கிடைக்கும் டிராக்டருடன், ஒரு கயிறு, ஜெர்ரிகேன் (Jerrican) மற்றும் மஹிந்திரா கொடி உள்ளிட்ட சிறப்பு ஆக்சஸெரீகள் (Accessories) முழு செட்டாக வழங்கப்படும். கடினமான விவசாயப் பணிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட யூவோ டெக்+ 585 DI லிமிடெட் எடிஷன் டிராக்டர்கள் அதிகபட்சமாக 33.9 கிலோவாட் (45.4 எச்பி) PTO அவுட்புட்டை வழங்கும் ஒரு சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் இயங்குகின்றன.

அதிகப்பட்சமாக 215 என்.எம் டார்க் மற்றும் 18 சதவீதம் பேக்கப் டார்க் திறனில் இயங்கக்கூடிய இந்த டிராக்டர்கள், சவாலான மண் நிலைகளிலும், கடினமான வேலைகளையும் திறம்பட கையாளும் திறன் கொண்டவை ஆகும். 2000 கிலோ ஹைட்ராலிக் தூக்கும் திறன் கொண்ட யூவோ டெக்+ 585 DI லிமிடெட் எடிஷன், பல வகையான விவசாய கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த உதவுகிறது.

mahindra limited edition tractors for this republic day

இந்த டிராக்டரில் டூயல் கிளட்ச், MSPTO மற்றும் ஒரு துணை வால்வு ஆகியவை உள்ளன. மேலும், முன்னால் செல்ல 12 கியர் மற்றும் பின்னால் செல்ல 3 கியர் டிரான்ஸ்மிஷன் ஆனது இந்த மஹிந்திரா டிராக்டரில் பல்வேறு விவசாயப் பயன்பாடுகளில் துல்லியமான கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட இயக்கத் திறனை உறுதி செய்கிறது.

பவர் ஸ்டியரிங் நீண்ட வேலை நேரங்களில் இயக்கத்தின் சோர்வைக் குறைக்கிறது. இந்த டிராக்டரில் 9.5 x 20 அங்குல முன்புற டயர்களும், 14.9 x 28 அங்குல பின்புற டயர்களும் பொருத்தப்பட்டு, உலர் மற்றும் ஈரமான வயல் நிலைகள் என இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட நிலைத்தன்மையையும் டிராக்‌ஷனையும் பெற முடிகிறது.

mahindra limited edition tractors for this republic day

இத்தகைய டிராக்டரில் குடியரசு தினத்தை முன்னிட்டு லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து மஹிந்திரா டிராக்டர்கள் நிறுவனத்தின் துணை தலைவரும், நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் தேசிய வணிக செயல்பாடுகளுக்கான தலைவருமான பரிஷித் கோஷ் பேசுகையில், "நோக்கமும் பெருமையும் இணையும்போது, அது ஒரு புரட்சிகரமான படைப்பை உருவாக்குகிறது.

இந்தக் குடியரசு தினத்தன்று, எங்கள் அடுத்த தலைமுறை மஹிந்திரா யூவோ டெக்+ டிராக்டரின் சிறப்புப் பதிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த டிராக்டர்கள் ஜனவரி 26 முதல் நாடு முழுவதும் உள்ள மஹிந்திரா டிராக்டர் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பிரபலமான மஹிந்திரா யூவோ டெக்+ 585 DI 4WD வகை டிராக்டர்கள், மூவண்ணக் கொடியின் நிறங்களில் வடிவமைக்கப்பட்டு, தனித்துவமான தோற்றத்தைப் பெற்றுள்ளன. இது அதன் சிறப்பம்சங்களை மேம்படுத்துவதுடன், நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் மஹிந்திராவின் உறுதிப்பாட்டையும், முன்னேற்றத்தையும் குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 25, 2026, 9:19 [IST]
English summary
Mahindra tractors unveils tricolour inspired limited edition tractors for this republic day
மேலும்... #mahindra #tractor #republic day #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X