டிரக், பஸ் வாங்கி விட்டா நல்ல காசு போல! இவ்வளவு பேர் ஒரே மாசத்துல வாங்கிடாங்களா?
கடந்த ஜனவரி மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் டிரக் மற்றும் பஸ் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. ஜனவரி மாதம் முழுவதும் மொத்தம் 3000 வாகனங்கள் விற்பனையாக உள்ளது. இது மஹிந்திரா நிறுவனத்தின் கமர்சியல் வாகன பிரிவுகளில் இரண்டு பிரிவுகளாக இயங்கும் மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் மற்றும் எஸ் எம் எல் ஆகிய நிறுவனங்களில் வந்த விற்பனையின் சேர்த்து ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனங்களை மட்டுமல்லாமல் டிரக் மற்றும் பஸ் போன்ற கமர்சியல் ரக வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வாகனங்களின் விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 3,065 கமர்சியல் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகமாகும். இந்த விற்பனை என்பது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டின் எண்ணிக்கையாக இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது கமர்சியல் வாகனங்களை இரண்டு விதமான பிராண்டுகளை விற்பனை செய்கிறது. அதன்படி மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு மற்றும் எஸ் எம் எல் மஹிந்திரா ஆகிய இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. ஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவில் மொத்தம் 1728 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே செக்மெண்டில் விற்பனையான வாகன எண்ணிக்கையை ஒப்பிடும்போது 49 சதவீதம் அதிகமாகும். அதே நேரம் பயணிகள் ஏற்றிச்செல்லும் கமர்சியல் வாகனங்களில் விற்பனை பார்க்கும்போது 1423 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனை ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் மற்றும் 24,129 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உள்ள விற்பனை எண்ணிக்கை ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகமாகும். அந்நிறுவனத்தின் இரண்டு பிரிவுகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும்போது மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் டிவிஷன் நிறுவனம் 1728 வாகனங்களை கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் மட்டும் 48% வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் கார்கோ வாகனங்கள் 1142 வாகனங்களும் பயணிகள் வாகனங்கள் 586 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. இதில் கார்கா வாகனங்கள் 59 சதவீத வளர்ச்சியும் பயணிகள் வாகனங்கள் 31 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. இந்த ஒரு நிறுவனம் மட்டும்நடப்பு நிதியாண்டில் 1157 வாகனங்களை விற்பனை செய்து 12 சதவீத வளர்ச்சியுடன் பயணித்து வருகிறது.
எஸ்எம்எல் மஹிந்திரா நிறுவனத்தில் 1337 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன இது 30 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இதில் சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் 500 மற்றும் மற்றும் பயணிகள் கமர்ஷியல் வாகனங்கள் 8837 விற்பனையாகியுள்ளது. இது சரக்கு வாகனத்தில் 31% பயணிகள் வாகனத்தில் 9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 1272 வாகனங்கள் விற்பனையாகி 19 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கமர்சியல் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இந்த செக்மெண்டில் டாடா நிறுவனம் தான் முன்னணியில் இருந்து வந்தாலும் தற்போது மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவங்கிவிட்டது .டாடாவிற்கு மாற்றாக பலர் மஹிந்திரா நிறுவனத்தின் கமர்சியல் வாகனங்களை பார்க்க துவங்கிவிட்டனர். வருங்காலங்களில் இந்த செக்மெண்டில் அந்நிறுவனம் நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








