லாபம் கொட்ட போகுது! ஆட்டோவா? இல்ல ஏரோப்ளேனா! அடிமாட்டு விலையில் களமிறக்கி இந்தியாவையே மிரள வைத்த மஹிந்திரா!

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கார்களை மட்டும் விற்பனை செய்வதில்லை. கூடவே வர்த்தக வாகனங்களையும் (Commercial Vehicles) விற்பனை செய்து வருகிறது. வர்த்தக வாகனங்களில், மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்களும் (Three-wheeler Auto-Rickshaw) அடங்கும். இந்த சூழலில் மஹிந்திரா நிறுவனம் இன்று (பிப்ரவரி 12), புதிய ஆட்டோ ரிக்ஸா ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா வூடோ (Mahindra UDO) என பெயர் சூட்டப்பட்டுள்ள இது, எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா (Electric Auto-Rickshaw) ஆகும். இது வழக்கமான ஆட்டோ ரிக்ஸாக்களை போல் அல்லாமல், மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. 'ஏவியேஷன் டிசைன்' அம்சங்களை மனதில் வைத்து மஹிந்திரா வூடோ உருவாக்கப்பட்டிருப்பது, அதன் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

Mahindra UDO

வூடோ என்பது, ஹிந்தி மொழியில், பறப்பதுடன் தொடர்புடைய ஒரு வார்த்தை ஆகும். செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக முழுமையான மோனோகாக் கட்டுமானத்தில் (Monocoque Construction), மஹிந்திரா வூடோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் மற்றும் ஓட்டுனருக்கு, சௌகரியமான பயணம் கிடைக்கும் என்பது உறுதி.

குறிப்பாக போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் உடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா வூடோவின் டிரைவர் இருக்கை 20 சதவீதம் தடிமனானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பைலட் இருக்கை' என இதனை குறிப்பிடும் மஹிந்திரா நிறுவனம், செக்மெண்ட்டிலேயே இதுதான் டிரைவர்களுக்கு மிகவும் சௌகரியமான இருக்கை என கூறியுள்ளது.

Mahindra UDO Electric Auto

அத்துடன் பயணிகளுக்கும் சிறப்பான ஹெட்ரூம், லெக்ரூம் கிடைக்கும் வகையில், மஹிந்திரா வூடோ உருவாக்கப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் மஹிந்திரா வூடோ எலெக்ட்ரிக் ஆட்டோவில் 11.7 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 265 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (ARAI-certified Range) ஆகும். இருப்பினும் நடைமுறை பயன்பாட்டில் 200 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா வூடோ எலெக்ட்ரிக் ஆட்டோவின் விலை 3,84,299 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 3,58,999 ரூபாய் என்ற விலையிலேயே மஹிந்திரா வூடோ எலெக்ட்ரிக் ஆட்டோவை வாங்க முடியும்.

3,58,999 ரூபாய் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்க கூடிய அறிமுக சலுகை விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், மஹிந்திரா வூடோ விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதால், வழக்கமான ஐசி இன்ஜின் ஆட்டோக்கள் உடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா வூடோ ஆட்டோவை இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆட்டோ டிரைவர்களுக்கு இது நல்ல லாபத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 12, 2026, 18:06 [IST]
English summary
Mahindra udo electric auto launched in india price range and more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+