கம்மி விலையில் வருது மஹிந்திராவின் புது மினி ஸ்கார்பியோ கார்.. வசதிகள் எல்லம் மிரட்டி விட்டாங்க!
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் கார் மாடல்களில் ஒன்று அதன் 'விஷன் S' மாடலின் தயாரிப்பு நிலை வடிவம். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'விஷன் S' கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. கான்செப்ட் வடிவிலேயே வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தக் கார் மாடல் இருந்தது.
ஏற்கனவே மஹிந்திராவிடம் சில சப்-4 மீட்டர் (4 மீ நீளத்திற்குள்ளான) எஸ்யூவிக்கள் இருக்கும் நிலையில், இந்த விஷன் S கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை வடிவத்தையும் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவிலேயே வெளியிடவுள்ளது மஹிந்திரா. ஏற்கனவே XUV 3XO, தார் மற்றும் பொலேரோ ஆகிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா.

இந்த கார்களின் சாயல் இல்லாமல் புதிய ஒரு காராக விஷன் S-ன் தயாரிப்பு நிலை வடிவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகும் போது ஸ்கார்பியோ என்ற பெயரைத் தாங்கியே இந்தப் புதிய கார் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்கார்பியோ கிளாஸிக் மற்றும் ஸ்கார்பியோ N ஆகிய இரண்டு மாடல்கள் மட்டுமே மஹிந்திரா லைன்-அப்பில் ஸ்கார்பியோ கார்களாக இருந்து வருகின்றன.
விஷன் S மாடலானது மூன்றாவது ஸ்கார்பியோ மாடலாக மஹிந்திராவின் லைன்-அப்பில் இணையவுள்ளது. நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கான்செப்ட் வடிவில் நாம் பார்த்த பெரும்பாலான டிசைன் அம்சங்களை தயாரிப்பு நிலை வடிவத்திற்கும் மஹிந்திரா கொண்டு செல்லும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பாக்ஸியான மற்றும் நேரான டிசைன் லாங்குவேஜையே தயாரிப்பு நிலை வடிவத்திலும் நாம் எதிர்பார்க்கலாம்.

கான்செப்ட் வடிவில் கொடுக்கப்பட்டதைப் போலவே, டெயில்கேட்டில் ஸ்பேர வீலும் கொடுக்கப்டலாம் எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் ரக்கடான மற்றும் ஸ்டைலான ஒரு எஸ்யூவி காராக இந்த விஷன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை கார் மாடல் இருக்கும். சப்-4 மீட்டர் எஸ்யூவிக்களில் ஆல் வீல் டிரைவ் அல்லது 4X4 வசதியை நிறுவனங்கள் கொடுப்பது கிடையாது. அந்த வகையில் இந்தப் புதிய எஸ்யூவியில் அந்த வசதியையும் மஹிந்திரா கொடுக்கவுள்ளது.
முன்பக்கம் இன்வர்டட் L வடிவ முகப்பு விளக்குகள், பிக்சல் வடிவ ஃபாக் விளக்குகள், திக்கான பாடி கிளாடிங், ஸ்டார் வடிவிலான டிசைனுடன் 19 இன்ச் வீல்கள், ரெட் காலிப்பர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள், ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் ஆகிய டிசைன் அம்சங்களை தயாரிப்பு நிலை வடிவத்திருக்கும் மஹிந்திரா கொண்டு செல்லும் என்றே கூறப்படுகிறது.
NU_IQ பிளாட்ஃபார்மில் இந்த விஷன் S கான்செப்டின் தயாரப்பு நிலை வடிவத்தை உருவாக்கவிருக்கிறது மஹிந்திரா. பல்வேறு வகையான பவர்ட்ரெயின் தேர்வுகளுக்கு ஏற்ற பிளாட்ஃபார்ம் இது. எனவே புதிய காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்கலாம். ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின்கள் இப்போது கொடுக்கப்படமாட்டாது என்றே தெரிகிறது. எனினும் எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம்.
மேலே கூறியது போல 4 மீட்டர்கள் நீளத்திற்குள்ளான ரக்கடான எஸ்யூவியா, ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள்ளான தொடக்க விலையில் இந்தக் புதிய எஸ்யூவி காரை மஹிந்திரா வெளியடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் டாப் எண்டின் விலை ரூ.17 லட்சத்தைத் தொடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முரட்டுத்தனமான ஒரு ஆஃப்-ரோடு எஸ்யூவியாக மட்டுமில்லாம், குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு எஸ்யூவி மாடலாக இந்தப் புதிய மஹிந்திரா எஸ்யூவி இருக்கும் எனத் தெரிகிறது. இது சப்-4 மீட்டர் எஸ்யூவிக்களில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவுமே ஒரு புதிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications