இந்த மாதிரி ஒரு காரை எப்படி இவ்ளோ குறைவான விலையில் விக்க முடியும்? போட்டி நிறுவனங்கள் மண்டைய பிச்சுக்க போகுது!

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில், மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S) என்ற கான்செப்ட் மாடலை, இந்தியாவில் காட்சிக்கு வைத்திருந்தது. தற்போது அதை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி, விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படும் காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. இது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Vision S Rear

மஹிந்திரா நிறுவனத்தின் லைன்-அப்பில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) கார்களுக்கு இடையே இந்த கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. எனவே இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 8 அல்லது 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), கியா சொனெட் (Kia Sonet), கியா சைரோஸ் (Kia Syros), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கு எல்லாம் இது விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Mahindra Vision S

அத்துடன் ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger) ஆகிய கார்களுக்கும், இது போட்டியாக இருக்கும். இதில், ரெனால்ட் பிரிட்ஜர் காரும் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் விஷன் எஸ் கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அவை 1.2 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்களாக இருக்கலாம். இதில், டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 130 ஹெச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் என்ற அளவில் இருக்கலாம். மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 117 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், லெவல் 2 அடாஸ், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பொதுவாக மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் லேடர்-ஃப்ரேம் (Ladder-frame) பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்படும். மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக், மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய கார் NU_IQ என பெயரிடப்பட்டுள்ள புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது. இது மோனோகாக் (Monocoque) ரகத்தை சேர்ந்தது ஆகும். லேடர்-ஃப்ரேம் பிளாட்பார்ம் உடன் ஒப்பிடும்போது, மோனோகாக் பிளாட்பார்ம் மூலம் உருவாக்கப்படும் கார்களில், கேபின் மற்றும் பூட் ஸ்பேஸ் இடவசதி சிறப்பாக இருக்கும்.

இதனால் மஹிந்திரா நிறுவனம் விஷன் எஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷன் மட்டுமல்லாது, எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள பல்வேறு கார்களையும், NU_IQ பிளாட்பார்ம் அடிப்படையிலேயே உருவாக்கவுள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்பத்தில் விஷன் எஸ் கான்செப்ட்டின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 8 அல்லது 9 லட்ச ரூபாய் என்பது மிகவும் சவாலான ஒரு விலை ஆகும். எனவே மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷன் இந்திய சந்தையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Friday, May 22, 2026, 16:44 [IST]
English summary
Mahindra vision s expected price features engine options rivals
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+