மஹிந்திரா களமிறக்க போகும் இந்த புதிய காரின் விலை இவ்ளோதானா! பாத்தா அப்படி தெரியலையே!

கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 4 கான்செப்ட் கார்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. அவை மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S), மஹிந்திரா விஷன் எக்ஸ் (Mahindra Vision X), மஹிந்திரா விஷன் டி (Mahindra Vision T) மற்றும் மஹிந்திரா விஷன் எஸ்எக்ஸ்டி (Mahindra Vision SXT) ஆகியவை ஆகும்.

இந்த கான்செப்ட் கார்கள் அனைத்தும் NU_IQ பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளன. இது மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய பிளாட்பார்ம் ஆகும். இதன் மூலம் 3.9 மீட்டர் முதல் 4.3 மீட்டர் வரை நீளம் கொண்ட கார்களை உருவாக்க முடியும். ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ரகத்தை சேர்ந்த கார்களுக்கு இந்த பிளாட்பார்ம் சப்போர்ட் செய்யும்.

Mahindra Vision S

பொதுவாக மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் லேடர்-ஃப்ரேம் பிளாட்பார்ம் (Ladder-frame Platforms) அடிப்படையில்தான் உருவாக்கப்படும். ஆனால் NU_IQ பிளாட்பார்ம், மோனோகோக் பிளாட்பார்ம் (Monocoque Platform) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எதிர்கால கார்கள் உருவாக்கத்தில் இந்த பிளாட்பார்ம்தான் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மஹிந்திரா நிறுவனம் தற்போது அந்த பிளாட்பார்முக்கு மாறியுள்ளது. இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் முதலில் மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் கார்தான் விற்பனைக்கு வரவுள்ளது. இது இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.

Mahindra Vision S Rear

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4-metre Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் லைன்-அப்பில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஆகிய கார்களுக்கு இடையில் இது நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), கியா சைரோஸ் (Kia Syros), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் இது நெருக்கடியை ஏற்படுத்தும்.

மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. முதலில் மஹிந்திரா விஷன் எஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரும். மஹிந்திரா விஷன் எஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் வரும் 2027ம் ஆண்டு (அடுத்த ஆண்டு) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்த விஷன் எக்ஸ், விஷன் டி மற்றும் விஷன் எஸ்எக்ஸ்டி கான்செப்ட் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளன. இந்த வரிசையில் முதலில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா விஷன் எஸ் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8-9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா விஷன் எஸ் காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) பஞ்சம் இருக்காது எனவும் கருதப்படுகிறது. பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Monday, May 11, 2026, 12:26 [IST]
English summary
Mahindra vision s expected price features rivals and launch details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+