புதிய நிறத்தில் வெளியான மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி.. பார்க்கவே அட்டகாசமா இருக்கே!

இந்தியாவில் மஹிந்திராவின் (Mahindra) ஃபிளாக்ஷிப் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது XEV 9e எலெக்ட்ரிக் எஸ்யூவி. சில மாதங்களுக்கு முன்பு இந்த எலெக்ட்ரிக் காரின் சினிலூக்ஸ் எடிஷன் (Cineluxe Edition) என்ற சிறப்பு எடிஷன் வேரியன்ட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது அந்த சிறப்பு எடிஷன் மாடலுக்கு புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது மஹிந்திரா.

உட்புறமும் வெளிப்புறமும், ப்ரீமியமாக, கிளாஸியாக இருக்கும் வகையிலான டிசைன் மற்றும் நிறத்துடன் சினிலூக்ஸ் எடிஷனை மஹிந்திரா வெளியிட்டது. குறிப்பாக காரின் வெளிப்புறம் இரண்டு தனித்துவமான நிறத் தேர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், காரின் உட்புறம் செஸ்ட்நட் பிரவுன் மற்றும் நாக்டர்ன் பிளாக் இணைந்த டூயல் டோன் கேபின் கொடுக்கப்பட்டது. இவை XEV 9e எஸ்யூவியின் லுக்கை இன்னும் கொஞ்சம் ப்ரீமியமாகக் காட்டின.

Mahindra XEV 9e Cineluxe Edition

மார்ச் மாதம் இந்த சினிலூக்ஸ் எடிஷன் வெளியிடப்பட்ட போது, இதற்கு சேட்டின் பிளாக் மற்றும் சேட்டின் ஒயிட் ஆகிய இரண்டு நிறத்தேர்வுகளை மஹிந்திரா கொடுத்திருந்தது. இந்நிலையில், தற்போது அவற்றுடன் மூன்றாவதாக சேட்டின் டெஸர்ட் மிஸ்ட் (Satin Desert Myst) என்ற புதிய மூன்றாவது நிறத்தேர்வைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது மஹிந்திரா.

பெயருக்கேற்றது போலவே பாலைவன மணலின் நிறத்தை ஒற்று, ஆனால் கிளாஸியான ஒரு நிறமாக இந்தப் புதிய சேட்டின் டெஸர்ட் மிஸ்ட் நிறம் இருக்கிறது. இந்த கிளாஸியான நிறத்தை எக்ஸ்க்ளூஸிவ்வாக XEV 9e எஸ்யூவியில் மட்டுமே வழங்குகிறது மஹிந்திரா. இந்த புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து சினிலூக்ஸ் எடிஷனின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Mahindra XEV 9e Cineluxe Edition

XEV 9e லைன்-அப்பில் டாப் எண்டான பேக் த்ரீ வேரியன்டின் அடிப்படையில் இந்த சினிலூக்ஸ் எடிஷன் உருவாக்கப்பட்டிருப்பதால், அதற்கு இணையாக 29.35 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையே இந்த சிறப்பு எடிஷன் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் கொண்டிருக்கிறது. வசதிகளைப் பொறுத்தவரை XEV 9e பேக் த்ரீ வேரியன்டில் இருக்கும் வசதிகள் அப்படியே இந்த சினிலூக்ஸ் எடிஷனிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

டேஷ்போட்டின் அகலத்திற்கு நீளும் மூன்று டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் டால்பி அட்மாஸ் வசதியுடன்,16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள், AR ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, சர்வைலன்ஸ் மோடுடன் கூடிய சரவுண்டு வியூ கேமரா, ஆட்டோ பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளும் சினிலூக்ஸ் எடிஷனில் கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்ட்ரெயினும் டாப் எண்டு பேக் த்ரீ வேரியன்டில் இருப்பது தான். அதாவது 79 kWh பேட்டரி பேக் மற்றும் 286 hp பவர்/ 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இணைந்த பவர்ட்ரெயினைக் கொண்டுள்ளது XEV 9e சினிலூக்ஸ் எடிஷன். இந்த பேட்டரி பேக் மற்றும் பவர்ட்ரெயின் செட்டப்புடன் 500 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை இந்தக் கார் கொடுக்கிறது.

குறிப்பு: காரில் விலையானது சார்ஜருக்கும் சேர்த்துக் கிடையாது. சார்ஜரை தனியே தான் நாம் வாங்க வேண்டும். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு 7.2 kW மற்றும் 11 kW சார்ஜர் தேர்வுகளை விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. சிறிய சார்ஜரை 50,000 ரூபாய் என்ற விலையிலும், பெரிய சார்ஜரை 75,000 ரூபாய் என்ற விலையிலும் நாம் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும், நிறைய வாடிக்கையளார்கள் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மஹிந்திராவே உள்ளது.

XEV 9e எலெக்ட்ரிக் காரின் சினிலூக்ஸ் எடிஷனை நிறைய பிரலங்களும் ஆர்வமாக வாங்குகிறார்கள். அதன் கிளாஸியான நிறங்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே தான் மேலும் சில தனித்துவமான நிறத்தைக் கொடுத்து இன்னும் வாடிக்கையாளர்கள் விரும்பத்தக்கதாக அதனை மாற்றியிருக்கிறது மஹிந்திரா.

Article Published On: Friday, July 3, 2026, 7:34 [IST]
English summary
Mahindra xev 9e cineluxe edition launched in satin desert myst colour
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out