மஹிந்திரா XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்! பாரத் NCAP சோதனையில் அசத்தல்!

வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது கவனிக்கும் முக்கிய அம்சங்களில் பாதுகாப்பும் மிக முக்கிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்வதற்கு ஏற்ற பெரிய எஸ்யூவிகளை வாங்க விரும்புவோர், விபத்து சோதனைகளில் கார்கள் பெறும் மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்தச் சூழலில் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி பாதுகாப்பு சோதனையில் சிறந்த மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. இந்தியாவின் பாரத் NCAP அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் முழுமையான ஐந்து நட்சத்திரப் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

Mahindra XEV 9S

பாரத் NCAP அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மஹிந்திரா XEV 9S கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 மதிப்பெண்களுக்கு 31.15 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதிகபட்ச மதிப்பெண்ணுக்கு மிக நெருக்கமாக இந்தக் கார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கான பாதுகாப்பில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பிரிவிலும் இந்த எஸ்யூவி சிறப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமான 49 மதிப்பெண்களில் 45 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரு பிரிவுகளிலும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றிருப்பது, இது அதிகம் பேர் குடும்பத்துடன் ஒன்றாக பயணிப்பவர்களுக்கான சிறந்த வாகனமாக இருக்கும் என்று இந்த சோதனை மூலமாக பரைசாற்றி இருக்கிறது.

Also Read

இந்த விபத்து சோதனைக்காக XEV 9S காரின் இரண்டு இருக்கை அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. Pack 2 என்ற ஆறு இருக்கைகள் கொண்ட மாடலும், Pack 3 என்ற ஏழு இருக்கைகள் கொண்ட மாடலும் சோதிக்கப்பட்டன. இந்த இரண்டு மாடல்களிலும் 79 kWh பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சோதனை செய்யப்பட்ட காரின் மொத்த எடை 2,529 கிலோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகள், பெரிய பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகனத்தின் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்தக் கார், விபத்து நேரத்தில் பயணிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு முக்கியமானதாக இருந்தது.

Also Read

முன்பக்கத்தில் ஏற்படும் மோதலைப் பிரதிபலிக்கும் Front Offset Deformable Barrier சோதனையில் XEV 9S கார் 16 மதிப்பெண்களுக்கு 15.15 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனையில் ஓட்டுனர் மற்றும் முன்பக்கப் பயணிகளின் உடல் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

பக்கவாட்டில் மற்றொரு வாகனம் மோதுவதைப் போன்ற Side Movable Deformable Barrier சோதனையிலும் இந்த எஸ்யூவி திருப்திகரமான முடிவைப் பெற்றுள்ளது. அதேபோல், Side Pole Impact சோதனையிலும் திருப்திகரமான பாதுகாப்பு முடிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு கோணங்களில் ஏற்படும் மோதல்களையும் எதிர்கொள்ளும் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

XEV 9S காரில் ஆறு ஏர்பேக்குகள் நிலையான பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க ஏர்பேக்குகள் மட்டுமின்றி, மூன்று வரிசைகளிலும் அமர்ந்திருக்கும் பயணிகளின் தலைப்பகுதியைப் பாதுகாக்கும் திரை வடிவ ஏர்பேக்குகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், முன்பக்கப் பயணிகளுக்கான பக்கவாட்டு பாதுகாப்பு ஏர்பேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, Electronic Stability Control, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்குமான சீட் பெல்ட் நினைவூட்டல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஓட்டுனருக்கான முழங்கால் ஏர்பேக் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலமாக விபத்து நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுகின்றன.

மஹிந்திராவின் மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவியான XEV 9e மற்றும் டாடா நிறுவனத்தின் ஹாரியர் EV ஆகிய கார்களும் பாரத் NCAP சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு கார்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையான 32 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

ஆனால், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த மூன்று கார்களும் 49 மதிப்பெண்களுக்கு 45 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இதனால் குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று மாடல்களும் ஒரே அளவிலான மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் XEV 9S சற்று குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஐந்து நட்சத்திர அந்தஸ்தைத் தக்கவைத்துள்ளது.

Article Published On: Tuesday, November 17, 2026, 14:29 [IST]
English summary
Mahindra xev 9s bharat ncap crash test five star safety rating
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out