மஹிந்திராவில் எல்லாரும் எதிர்பார்த்த கார் டெலிவிரி துவங்கியாச்சு! இன்னும் சில நாட்களில் சாலையில் பார்க்கலாம்!
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட பழம்பெரும் பாலிவுட் நடிகர் கபீர் பேடி இந்த எலெக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்று இருந்ததை நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் BE 6 மற்றும் XEV 9e என்கிற இரு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டிற்கும் மக்கள் மத்தியில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, விலையுயர்ந்ததாக இருப்பினும் XEV 9e எலெக்ட்ரிக் காரை பலரும் போட்டிப் போட்டு வாங்க ஆரம்பித்தனர்.

இதனாலேயே வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கும் விதமாக XEV 9e எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வெர்சனாக XEV 9S எலெக்ட்ரிக் காரை கடந்த 2025ஆம் ஆண்டில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து XEV 9S எலெக்ட்ரிக் காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட்டன. ஆனால், இந்த எலெக்ட்ரிக் காரின் விலைமிக்க வேரியண்ட்களை புக் செய்தவர்களுக்கே முதலாவதாக டெலிவிரி துவங்கப்பட்டன.
விலை குறைவான 'பேக் ஒன் அபோவ்' வேரியண்ட்டை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் பல மாதங்களாக துவங்கப்படாமல் இருந்துவந்த நிலையில், XEV 9S பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டின் டெலிவிரிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள் 'ஆர்.எஸ் ஆட்டோ வேர்ல்டு' என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. XEV 9S பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.95 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதேநேரம், XEV 9e எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.9 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
விலை குறைவானதாக இருப்பினும், XEV 9e எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப-நிலை வேரியண்ட்டை காட்டிலும் XEV 9S எலெக்ட்ரிக் காரின் பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டில் அதிக தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக XEV 9S பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், XEV 9S காரின் டாப் பேக் த்ரீ வேரியண்ட்டிற்கும், எண்ட்ரி-லெவல் பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை.
டாப் வேரியண்ட்டில் கிடைப்பதை போன்று, LED DRL-கள் உடன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள், பனிக்கட்டி வடிவில் LED ஃபாக் விளக்குகள், பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், பின்பக்க விண்ட்ஷீல்டிற்கும் வாஷர் & வைபர், தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் ஃபேன்சியான ஃபிரேலெஸ் வைபர்கள் உள்ளிட்டவற்றை பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டில் பெறலாம்.
இவற்றுடன், பார்க்கிங் சென்சார்கள், முன்பக்க கேமரா, சைடு கேமராக்கள், ADAS, LED டெயில்லைட்கள், முன் & பின்பக்க பம்பர்கள் உள்ளிட்டவையும், இதேபோன்று உட்புறத்திலும் பல பிரீமியம் அம்சங்களை கொண்டதாகவும் XEV 9S பேக் ஒன் அபோவ் வேரியண்ட் விளங்குகிறது. XEV 9S எலெக்ட்ரிக் காரில் இரு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டாலும், பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டில் கிடைப்பது 59kWh பேட்டரி மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை பெறுவதற்கு XEV 9S எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு முக்கியமானதாக மாறி வருகிறது. தற்போது விலை குறைவான பேக் ஒன் அபோவ் வேரியண்ட்டின் டெலிவிரி துவங்கப்பட்டுள்ளதால், மஹிந்திரா விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications