அம்பானியே நேரா ஷோரூமுக்கு போயி மூட்டை மூட்டையா பணத்த கொட்டினாலும் 9 மாசம் ஆகும்! பொறுமையை சோதிக்கும் புது கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரானது, ஐசி இன்ஜின் மூலம் இயங்க கூடியது ஆகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra XEV 9S

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை) வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கார் கொண்டுள்ளது.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளும் (Features) மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட் (Variant) வாரியான காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

Mahindra XEV 9S Front Design

இது குறித்து வாஹன் வார்ட்டா எக்ஸ் (X) தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி அந்த எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட் வாரியான காத்திருப்பு காலத்தை பார்க்கலாம்.

பேக் த்ரீ 79 kWh மற்றும் பேக் த்ரீ எபோவ் 79 kWh ஆகிய 2 வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 3-4 மாதங்களாக உள்ளது. அதே நேரத்தில் பேக் 2 எபோவ் 79 kWh மற்றும் பேக் 2 எபோவ் 70 kWh ஆகிய 2 வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 4-5 மாதங்களாக இருக்கிறது.

மறுபக்கம் பேக் ஒன் எபோவ் 79 kWh வேரியண்ட்டிற்கான காத்திருப்பு காலம் 6-7 மாதங்களாக இருக்கிறது. இறுதியாக பேக் ஒன் எபோவ் 59 kWh வேரியண்ட்டிற்கான காத்திருப்பு காலம் 8-9 மாதங்களாக உள்ளது. ஆனால் டீலர்ஷிப்கள் மற்றும் நகரங்களை பொறுத்து காத்திருப்பு காலம் மாறுபடலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்த விரிவான தகவல்களுக்கு, உங்களுக்கு அருகில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காத்திருப்பு காலம் என்பது நீங்கள் முன்பதிவு (Booking) செய்யும் நாளில் இருந்து உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படுவதற்கு இடையேயான காலம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்களுக்கு காத்திருப்பு காலம் குறைவாக இருப்பதையும், விலை குறைவான வேரியண்ட்களுக்கு காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதையும் தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அதன் காத்திருப்பு காலமும் அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 9, 2026, 17:51 [IST]
English summary
Mahindra xev 9s variant wise waiting period explained you should wait up to 9 months
மேலும்... #mahindra #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+