மஹிந்திராவின் முதல் சிஎன்ஜி கார் ரெடி! அக்.15ல் வருகிறது XUV 3XO சிஎன்ஜி மாடல்!!

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வால் தற்போது சிஎன்ஜி, எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிஎன்ஜி கார்களைத் தேர்வு செய்கின்றனர். இதனை மனதில் வைத்து, இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வந்த மஹிந்திரா நிறுவனம், தற்போது சிஎன்ஜி பிரிவிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது.

வரும் 15ந் தேதி மஹிந்திரா நிறுவனம் தனது முதல் சிஎன்ஜி கார் மாடலை மார்க்கெட்டில் களமிறக்க உள்ளது அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர் மூலமாக உறுதியாகி இருக்கிறது. மேலும், தனது காம்பேக்ட் எஸ்யூவி மாடலான 3XO காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வை வழங்க இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி வசதியுடன் தயாரிக்கப்படும் பயணிகள் காரை மஹிந்திரா முதல்முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.

Mahindra 3XO

எஞ்சின் விபரம்

தற்போதைய மஹிந்திரா XUV 3XO காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளிட்ட தேர்வுகள் உள்ளன. இதே எஞ்சினுடன் சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் வர வாய்ப்பு உள்ளது. இந்த 1.2 லிட்டர் எம்பிஎஃப்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் 111 எச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் வழங்கும். ஆனால், சிஎன்ஜி எரிபொருளில் வரும்போது பவர் மற்றும் டார்க் சற்று குறைவாக இருக்கும். புதிய சிஎன்ஜி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

பூட்ரூம் இடவசதி

சிஎன்ஜி கார்களில் சிலிண்டரைப் பொருத்துவதால் டிக்கி இடவசதி குறைவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாகும். XUV 3XO காரிலும் சிஎன்ஜி சிலிண்டர் எவ்வாறு பொருத்தப்படும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமா அல்லது வழக்கமான ஒரு சிலிண்டர் அமைப்பு இடம்பெறுமா என்பதும் எல்லோரிடத்திலும் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது.

புதிய வசதிகள் எதிர்பார்ப்பு

மஹிந்திரா XUV 3XO காரில் ஏற்கெனவே பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி மாடலிலும் எந்தெந்த வேரியண்ட்டுகளில் இந்த வசதிகள் இடம்பெறும் என்பது இன்னும் தெரியவில்லை. பெட்ரோல் மாடலுக்கு இணையான வசதிகள் கிடைக்குமா என்பதையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read

எதிர்பார்க்கும் விலை

தற்போதைய XUV 3XO காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.79 லட்சமாக உள்ளது. சிஎன்ஜி மாடலின் விலை, அதற்கு இணையான பெட்ரோல் வேரியண்ட்டைவிட ரூ.40,000 வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி போன்ற மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும். குறைந்த எரிபொருள் செலவுடன் எஸ்யூவி வாங்க விரும்புபவர்களுக்கு இது கூடுதல் தேர்வாக அமையலாம். அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பில் விலை, மைலேஜ் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த உறுதியான விபரங்கள் வெளியிடப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வு

சிஎன்ஜி பிரிவில் டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இந்தச் சூழலில், மஹிந்திரா XUV 3XO CNG காரின் விலை சவாலாக நிர்ணயிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும். குறிப்பாக, குறைவான எரிபொருள் செலவுடன் ஸ்டைலான காம்பேக்ட் எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்தப் புதிய மாடல் மற்றொரு தேர்வாக அமையும்.

Article Published On: Saturday, October 10, 2026, 12:33 [IST]
English summary
Mahindra xuv 3xo cng launch october 15 expected price features specs
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out