மாருதி பிரெஸ்ஸாவை விட 72 ஆயிரம் குறைவான விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ! ஷோரூம்ல கூட்டம் அலைமோதுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் 9,199 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இதில் முதல் காரணம் வசதிகள் (Features) ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வசதிகளை பொறுத்தவரையில் 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 7 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் ரிமோட் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்படுகின்றன.

அத்துடன் 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டர்போ டீசல் ஆகியவை ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 7.54 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதாவது இது அதன் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை (Maruti Suzuki Brezza) விட 72 ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 8.26 லட்ச ரூபாயாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.88 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மஹிந்திரா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய மற்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ நல்ல ஆப்ஷன்தான் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
செய்தியின் இறுதியில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து பத்தி சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications