XUV 3XO எஸ்யூவியின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்தி வருகிறது மஹிந்திரா. அந்த வரிசையில் தற்போது XUV 3XO சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. XUV 3XO எஸ்யூவியின் விலை வேரியன்ட் வாரியாக எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் மஹிந்திராவின் லைன்-அப்பில் XUV 3XO தான் அந்நிறுவனத்திற்கு மூன்றாவது அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இருந்து வருகிறது. இது XUV 3XO EV-யையும் சேரும். மஹிந்திராவின் விற்பனையில் சுமார் 16 சதவீதம் XUV 3XO மூலமாகவே வருகிறது. இந்நிலையிலேயே இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது மஹிந்திரா.

Mahindra XUV 3XO

இந்த எஸ்யூவியின் விலையை தற்போது 6,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா. MX1, ரெவ்X M, ரெவ்X M(O), MX2, MX2 ப்ரோ, MX3, MX3 ப்ரோ, AX5, ரெவ்X A, AX5 L, AX7 மற்றும் AX7 L என 12 வேரியன்ட்களாக இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா.

இதில் அடிப்படையான MX1 வேரியன்டின் விலை 25,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் தொடக்க விலையும் உயர்ந்திருக்கிறது. எனினும் 8 லட்சம் ரூபாய்க்குள்ளாகவே இருக்கிறது. இனி XUV 3XO எஸ்யூவியை 7.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி நாம் வாங்கலாம்.

Mahindra XUV 3XO

MX2 ப்ரோ ஆட்டோமேட்டிக் வேரியன்டின் விலையே குறைந்தபட்சமாக 6,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் இரண்டு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்து வருகிறது மஹிந்திரா.

இதில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ட்ரிம்களின் விலை 6,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், டீசல் இன்ஜின் கொண்ட XUV 3XO ட்ரிம்களின் விலையானது 9,900 ரூபாய் முதல் 14,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. டூயல் டோன் நிறம் கொண்ட ட்ரிம்களின் விலையானது 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இனி XUV 3XO காரை 7.79 லட்சம் ரூபாய் முதல் 15.04 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். டீசல் இன்ஜின் கொண்ட ட்ரிம்மை 9.36 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை 9.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களில் ஒன்றாக இந்த மஹிந்திரா XUV 3XO-வும் இருந்து வருகிறது. இதன் எலெக்ட்ரிக் வடிவத்தை XUV 3XO EV என்ற பெயரில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டாடா பன்ச், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃபிராங்க்ஸ், டொயோட்டா டெய்ஸர், நிஸான் மேக்னைட், ரெனோ கைகர், ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக XUV 3XO விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது XUV 3XO எஸ்யூவி மட்டுமின்றி தாரி ஆஃப்-ரோடு எஸ்யூவியின் விலையையும் மஹிந்திரா உயர்த்தியிருக்கிறது. மஹிந்திரா மட்டுமின்றி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் மஹிந்திராவும் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இனி முன்பதிவு செய்பவர்கள் இந்தப் புதிய விலையிலேயே கார்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, July 14, 2026, 10:55 [IST]
English summary
Mahindra xuv 3xo suv price hiked along with thar lifestyle suv
மேலும்... #mahindra #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out