மஹிந்திரா XUV 3XO சிஎன்ஜி காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்: பாரத் NCAP சோதனையில் அசத்தல்!

இந்தியாவில் பாதுகாப்பான கார்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் கார் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் தனது முதல் சிஎன்ஜி எரிபொருள் மாடலான XUV 3XO ZNG காரை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கு சிறப்பான பாதுகாப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

பாரத் NCAP (Bharat NCAP) அமைப்பு நடத்திய பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற சப் காம்பேக்ட் CNG எஸ்யூவி என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mahindra 3XO CNG

தர மதிப்பீடு

பாரத் NCAP சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளுக்கு 29.36 புள்ளிகளை XUV 3XO ZNG பெற்றுள்ளது. அதேபோல், குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளைப் பெற்று தனது பாதுகாப்புத் திறனை நிரூபித்துள்ளது. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

இதற்கு முன்பே பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களைக் கொண்ட XUV 3XO கார் கடந்த 2024 நவம்பரில் பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றிருந்தது. தற்போது அதே பாதுகாப்பு அங்கீகாரத்தை CNG மாடலும் பெற்றிருப்பது, இந்த காரைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்குகிறது.

Also Read

பாதுகாப்பு வசதிகள்

மஹிந்திரா XUV 3XO ZNG காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை பொருத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் CNG பயன்பாட்டுக்கென பிரத்யேக பாதுகாப்பு தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிவாயு கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து தானாகவே பெட்ரோல் பயன்பாட்டிற்கு மாறும் வசதி உள்ளது. இதன் மூலம் பயணத்தின்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்க முடியும்.

Also Read

எஞ்சின் மற்றும் மைலேஜ் விவரங்கள்

மஹிந்திரா XUV 3XO ZNG காரில் 1.2 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு பயன்பாட்டு முறைகளிலும் 113 ஹெச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு எரிபொருள் முறைகளிலும் ஒரே திறனை வழங்குவது இதன் முக்கிய சிறப்பாகும்.

CNG பயன்பாட்டில் இந்த கார் ஒரு கிலோவுக்கு 24.7 கி.மீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காரின் அடிப்பகுதியில் இரண்டு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், பூட் பகுதியில் தட்டையான தரைத்தளத்துடன் 270 லிட்டர் பயன்படுத்தக்கூடிய இடமும் கிடைக்கிறது.

விலை மற்றும் வேரியண்ட்டுகள்

இந்தியாவில் XUV 3XO ZNG கார் MX Edge, REVX Edge, AX5 மற்றும் REVX A என நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாகவும், டாப் வேரியண்ட் விலை ரூ.12.27 லட்சமாகவும் உள்ளது. குறைந்த எரிபொருள் செலவு, டர்போ எஞ்சின் செயல்திறன் மற்றும் அதிக பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே காரில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா XUV 3XO ZNG சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். குறிப்பாக, CNG கார்களிலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 5 ஸ்டார் மதிப்பீடு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.

Article Published On: Friday, November 6, 2026, 15:20 [IST]
English summary
Mahindra xuv 3xo zng 5 star bharat ncap safety rating
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out