ஜனநாயகன் படத்தை விட இந்த காருக்குதான் நாடே காத்துகிட்டு இருக்கு! ஷோரூம்களில் தென்பட்டதால் சந்தோஷத்தில் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டெஸ்ட் டிரைவ் (Test Drives) பணிகள், கடந்த ஜனவரி 8ம் தேதியில் இருந்தே தொடங்கப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து முன்பதிவு (Booking) செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

இதையொட்டி இந்தியா முழுக்க உள்ள டீலர்ஷிப்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார்கள் தற்போது வர தொடங்கியுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 203 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 185 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 2.2 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும். இந்த இன்ஜின்கள் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சக்தி வாய்ந்த இன்ஜின்கள் உடன், உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள் மற்றும் 540 டிகிரி கேமரா போன்றவை எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் முன் பக்க டேஷ்போர்டில், 3 ஸ்க்ரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை ஆகும். அத்துடன் கூடுதலாக முன் பக்க பயணியின் இருக்கை முன்பாகவும் ஒரு திரை வழங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவும் தலா 12.3 இன்ச்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், டால்பி அட்மாஸ் உடன் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளையும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சொகுசு கார்களுக்கே சவால் விடும் வகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.66 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது முதலில் முன்பதிவு செய்யும் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். அதன் பின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை போலவே, அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு புதிய காரை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








