பாரத் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச ஸ்டார் ரேட்டிங்... அசத்திய மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO கார்!

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO காருக்கு அதிகபட்ச பாதுகாப்புத் தர மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பான பாதுகாப்பை தரத்தை இந்த கார் வெளிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பாரத் என்சிஏபி அமைப்பு இன்று சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் (Adult Occupant Protection - AOP) 32 புள்ளிகளுக்கு 30.76 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேபோல், சிறியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் (Child Occupant Protection - COP) 49 புள்ளிகளுக்கு 44.97 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் பெற்ற அதிக மதிப்பெண்கள் காரணமாக ஒட்டுமொத்தமாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்துள்ளது.

Mahindra XUV 7XO Crash Test

இந்த சோதனைக்காக மஹிந்திரா XUV 7XO எஸ்யூவியின் AX7 டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முன்சக்கர இயக்கம் (FWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) என இரண்டு வகையான டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த சோதனை முடிவின் 5 நட்சத்திர மதிப்பீடு மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO காரின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

பாரத் என்சிஏபி பாதுகாப்புச் சோதனையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புடன் மட்டுமின்றி, பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த மோதல் சோனையில் முன்புற ஆஃப்செட் கிராஷ் டெஸ்ட் 64 கி.மீ வேகத்திலும், பக்கவாட்டு பகுதியின் பாதுகாப்பு அறியும் நோக்கில், 50 கி.மீ வேகத்திலும், காரின் பக்கவாட்டு கட்டுமானத் தரத்தை சோதிக்கும் கம்பத்தில் மோதும் போல் சைடு இம்பாக்ட் சோதனை 29 கி.மீ வேகத்திலும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் காரின் கட்டமைப்பு வலிமை மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன.

Mahindra XUV 7XO Crash Test

இந்தியாவில் கார் வாங்குபவர்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO காருக்கு பாரத் என்சிஏபி அமைப்பின் 5 நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது கூடுதல் வலு சேர்க்கும் விஷயமாக பார்க்கலாம்.

Also Read

கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO கார் இதுவரை 70,000 மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. மாதத்திற்கு சராசரியாக 9,000 கார்கள் என்ற அளவில் விற்பனையாகி அசத்தி வருகிறது. இது சிறந்த 7 சீட்டர் மாடலாகவும் வாடிக்கையாளர்கள் தேர்வில் முதன்மையாக உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் வாகன பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் Bharat NCAP 2.0 திட்டமும் தயாராகி வருகிறது. 2027 அக்டோபர் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த அடுத்த கட்ட திட்டத்தில் விபத்தைத் தவிர்ப்பது, பாதசாரிகள் பாதுகாப்பு, விபத்துக்குப் பிறகு மீட்பு உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பீட்டில் இடம்பெற உள்ளன. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Article Published On: Tuesday, September 15, 2026, 17:18 [IST]
English summary
Mahindra xuv 7xo bharat ncap crash test 5 star safety rating
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out