போட்டி நிறுவனங்களை கதற விட போகுது... ஜனநாயகன் படத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார் இன்று அறிமுகம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என்ற பெயரில் அழைக்கப்படும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படவுள்ளது. அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இன்ஜின்கள் ஆகும்.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இருக்காது. இதற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரும் விதிவிலக்கு அல்ல.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் முன் பகுதி டேஷ்போர்டில் 3 திரைகள் (டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை) ஆகிய வசதிகள் எல்லாம் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டால்பி அட்மாஸ் உடன் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் மற்றும் புதிய 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட லைட்கள் போன்ற அம்சங்களையும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில், நம்மால் உறுதியாக எதிர்பார்க்க முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருக்கு, தற்போது விறுவிறுப்பாக முன்பதிவுகள் (Bookings) நடைபெற்று வருகின்றன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை, தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier), ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.
அதிநவீன வசதிகள் உடன் கூடிய ஒரு பிரீமியமான, அதே நேரத்தில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் நிறைந்த ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








