ஆடி, பென்ஸ் கார்களை தூக்கி சாப்பிடும் இந்திய தயாரிப்பு! விலை இவ்ளோதானா! உலகையே மிரள விட்டுட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO). இது இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) காரின், அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன் ஆகும்.

அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று (ஜனவரி 5) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra XUV 7XO

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டேஷ்போர்டில் தலா 12.3 இன்ச் அளவில் 3 திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். மற்றொரு திரை, முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 திரைகள் கொண்ட அமைப்புதான், தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

இதுதவிர 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 540 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் என்ட்ரி, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ட்யூயல் வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய பின் இருக்கைகள் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Mahindra XUV 7XO SUV

அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 13.66 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 22.47 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ விற்பனையில் சாதனைகளை படைக்கலாம்.

ஆனால் முதலில் முன்பதிவு (Bookings) செய்யும் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் இந்த விலையில் கிடைக்கும் என மஹிந்திரா வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன.

எனவே பொங்கலுக்கு (Pongal) ஒரு புதிய காரை வாங்கலாம் என திட்டமிட்டு கொண்டுள்ளவர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் வருகை, டாடா சஃபாரி (Tata Safari), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் ஜீப் காம்பஸ் (Jeep Compass) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும். எனவே அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் நிரம்பிய, அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2026, 22:22 [IST]
English summary
Mahindra xuv 7xo launched in india price features engine options and more
மேலும்... #mahindra #new launches #Pongal 2026 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+