இந்த விலையில் வேற எந்த காரிலும் கிடைக்காது! மஹிந்திரா அடிக்குறது எல்லாம் சிக்ஸர் தான்!!
மஹிந்திரா (Mahindra) தனது நவீன பெட்ரோல்/டீசல் எஸ்யூவி (SUV) ரக காராக 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) காரை இந்தியாவில் ரூ.13.66 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ள நிலையில், இந்த தொகுப்பில், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல்முறையாக புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.24.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளன. இந்த ஏழு இருக்கை கொண்ட எஸ்யூவி கார் அதன் புதிய தலைமுறையில், பல்வேறு புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளுடன் எதிர்பார்த்ததை போல் அதன் பிரிவில் புதிய பென்ச் மார்க்கை நிர்ணயித்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் முக்கிய அம்சம் அதன் டிரிபிள் பனோரமிக் டிஸ்ப்ளே ஆகும். இந்தியாவில் ஏழு இருக்கை கொண்ட பெட்ரோல்/டீசல் எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக இந்த அமைப்பு இந்த மஹிந்திரா காரில் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று திரைகளும் 31.24 சென்டிமீட்டர் சினிமாஸ்கோப் டால்பி விஷன் டிஸ்ப்ளேக்கள் ஆகும்.
16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த 3 டிஸ்பிளேக்கள் காரின் உட்புற தோற்றத்தையும், பயண அனுபவத்தையும் அடுத்த நிலைக்கு உயர்த்துகின்றன. இதனுடன், உலகத் தரம் வாய்ந்த வசதிகளை எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ வழங்குகிறது. இதில், நான்கு வழிகளில் பாஸ் மோட் (Boss Mode) அம்சம் ஒன்றாகும்.
இதன் மூலம் பின் இருக்கை பயணிகள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தங்கள் கால்களுக்கான இடத்தை அதிகரிக்க முடியும். பிரீமியம் தரத்திலான லெதரெட் இன்டீரியர்களை கொண்ட காரின் கேபினுள் மல்டி-ஸோன்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், காரின் முன் மற்றும் பின் இருக்கைகளில் சிறந்த சௌகரியம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கிறது.

மேம்பட்ட அட்ரெனோக்ஸ்+ (Adrenox+) இணைப்பு வசதியுடன், பயனர்கள் தங்கள் சொந்த சாதனங்களை இணைத்து, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் தடையின்றி திரைப்படங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கலாம். முன் & பின் இருக்கை வரிசைகள் இரண்டிற்கும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஒரு இன்டெலி கமாண்ட் சென்டர் (Intelli Command Centre) மற்றும் பிரத்தியேக கூலிங் வசதி போன்ற கூடுதல் அம்சங்களும் இந்த காரில் உள்ளன.
புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, அதிர்வெண் தேர்ந்தெடுக்கப்பட்ட டாம்பிங் (FSD) கொண்ட டேவின்சி சஸ்பென்ஷன் சிஸ்டத்தின் அறிமுகமாகும். வெகுஜன மக்கள் வாங்கும் கார்களுக்கான உலகின் முதல் செயலற்ற சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் இது என மஹிந்திரா கூறுகிறது. இந்த மேம்பட்ட அமைப்பானது சாலை நிலைமைகளுக்கு ஏற்ப சஸ்பென்ஷனின் இறுக்கத்தன்மையை தானாகவே சரிசெய்து, கரடுமுரடான மற்றும் ஆஃப்-ரோடு பரப்புகளில் கூட மென்மையான, சீரான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும்.
இது அதிவேகமாக வளைவுகளில் திரும்பும்போது மற்றும் திடீர் பிரேக்கிங்கின் போது பாடி ரோலைக் குறைத்து, ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. இவற்றுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் இந்தியாவிலேயே முதல்முறையாக 540-டிகிரி கேமரா சிஸ்டத்தையும் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு, காரைச் சுற்றி முழுப் பார்வையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், காரின் அடியிலும் ஒரு வெளிப்படையான பார்வையை அளிக்கிறது.

இது ஓட்டுனர்கள் சீரற்ற சாலைகள் மற்றும் குறுகிய இடங்களை அதிக நம்பிக்கையுடன் கடக்க உதவுகிறது. இதன் மூலம் காரின் உடல் மற்றும் பெயிண்ட் சேதமடைவதைத் தவிர்க்கலாம். கூடுதலாக, இந்த கேமரா அமைப்பு தினசரி பயணங்களைப் பதிவு செய்யும் DVR (டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்) செயல்பாட்டையும் உள்ளடக்கியது ஆகும்.
லெவல்-2 அடாஸ் (ADAS) தொகுப்பு இப்போது கூடுதலாக டைனமிக் விஷுவலைசேஷன் அம்சத்துடன் வந்துள்ளது. இது காரை சுற்றியுள்ள சூழலை 3D வடிவத்தில் காட்டுகிறது. அட்ரெனோக்ஸ்+ கனெக்டட் கார் பிளாட்ஃபார்ம் இப்போது அலெக்ஸாவை சாட்ஜிபிடி (ChatGPT) உடன் ஒருங்கிணைத்துள்ளது. இது லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் SA8155P சிப்செட் மூலம் ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்களை பெறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் எக்ஸ்யூவி700 ஒன்றாகும். இதன் பரிணாம வளர்ச்சியாக வந்துள்ள புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய கால மாடர்ன் தொழிற்நுட்பங்கள் அடங்கிய முழுமையாக பேக்கேஜ் ஆக இந்த லேட்டஸ்ட் எஸ்யூவி காரை மஹிந்திரா உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









