7-சீட்டர் காராக 20 ஆயிரம் கஸ்டமர்களின் நம்பிக்கையை பெற்ற மஹிந்திரா கார்! மூன்றே மாதங்களில் கிடைத்த வரவேற்பு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக காரான எக்ஸ்.யூ.வி 7.எக்ஸ்.ஓ (XUV 7XO)-இன் டெலிவிரிகள் (Deliveries) எண்ணிக்கை 20 ஆயிரம் யூனிட்களை எட்டியுள்ளது. அதாவது, 20 ஆயிரம் கஸ்டமர்களை இந்த மஹிந்திரா கார் சென்று சேர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த பல வருடங்களாகவே எஸ்யூவி (SUV) ரக கார்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்கள் மட்டுமே மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தாழ்வான உடலமைப்பை கொண்ட ஹேட்ச்பேக் (Hatchback), செடான் (Sedan) ரக கார்கள் எதுவும் கடந்த பல வருடங்களாகவே விற்பனை செய்யப்படுவது இல்லை.

குறிப்பாக, அதிக பயணிகள் பயணிக்கக்கூடிய அளவில் பெரியதான எஸ்யூவி கார்களை விற்பனை செய்யவே மஹிந்திரா விரும்புகிறது. இதற்காகவே, சில வருடங்களுக்கு முன்பு வரையில் எக்ஸ்யூவி500 (XUV500) கார் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன்பின் அது எக்ஸ்யூவி700 ஆக பரிணாம் வளர்ச்சி அடைந்தது. பின்னர், எக்ஸ்யூவி700 காரின் நியூ ஜென்ரேஷன் வெர்சன் 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' என்கிற பெயரில் கடந்த 2026 ஜனவரி 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட 3 மாதங்களில் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டெலிவிரிகள் 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளன. அதாவது, இந்த 3 மாதங்களில் 20 ஆயிரம் பேர் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இவை யாவும் இந்திய மக்கள் டெலிவிரி செய்யப்பட்டவை மட்டுமே ஆகும்.

இது இல்லாமல், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி700 காரை காட்டிலும் மிகவும் அட்வான்ஸான தோற்றத்தில் உருவாக்கப்படுகிறது.
மஹிந்திராவில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் எக்ஸ்இவி 9இ (XEV 9e) என்கிற எலெக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, எக்ஸ்இவி 9இ காரின் தோற்றம் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதனால், அதேபோன்றதான டிசைனில் உருவாக்கப்பட்டு எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல், உட்புறத்தில் பனோரமிக் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, சன்ரூஃப், முன் & பின் வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள், லெவல்-2 அடாஸ் (ADAS), டோல்பி விஷன் சப்போர்ட், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, இண்டெல்லி கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் 540-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த காரில் 2 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. ரூ.13.66 லட்சத்தில் இருந்து ரூ.25.07 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் பல விதமான கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) என்கிற சொந்த மஹிந்திரா நிறுவனத்தின் காரை தவிர்த்து எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருக்கு விற்பனையில் சவாலான போட்டி இல்லை. இதன் மூலமாகவே 20 ஆயிரம் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார்கள் குறுகிய காலத்தில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்யூவி700 போன்ற ஒரு பிரபலமான காருக்கு மாற்றாக ஒரு காரை கொண்டுவருவது கடினம்; ஆனால் அதனை மஹிந்திரா எளிதாக நிஜமாக்கி காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








