இப்ப புக் பண்ணா 1 வருஷம் கழிச்சு தான் டெலிவரி அப்படி இந்த கார்ல என்னதான் இருக்குது?
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் தனது எஸ்யூவி 700 காரை அப்டேட் செய்து எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற புதிய பெயரில் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் பிரபலமான வாகனத்தை இயக்குனராக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் தனது காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த காரில் புதிய பெயர் மற்றும் அல்லாமல் புதிய டிசைன் வடிவமைப்பு உள்ள மாற்றங்கள் இருந்தன. இந்த காருக்கான புக்கிங் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி துவங்கியது. இந்த காரின் டெலிவரிகள் கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கியது. நீண்ட கால காத்திருப்பு காலம் கொண்ட காராக இந்த கார் அறியப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த காருக்கான புக்கிங் அதிகரித்து இதற்கான காத்திருப்பு காலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காருக்கு வேரியன்ட் வாரியாக காத்திருப்பு காலங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஏஎக்ஸ் வேரியன்ட் மேனுவல் முன் வீல் டிரைவ் காருக்கு 12 மாதங்களும், டீசல் மேனுவல் மேனுவல் வேரியன்டிற்கும் 12 மாதங்களும் காத்திருப்பு காலம் உள்ளன. அடுத்ததாக ஏஎஸ்3 வேரியண்டில் மேனுவல் ஆட்டோமேட்டிக் முன்பக்க வீல் டிரைவ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் உள்ளன. மொத்தம் நான்கு வேரியண்டலுக்கும் ஐந்து மாதம் காத்திருப்பு காலம் உள்ளது. அதேபோல ax5 வேரியண்டிற்க்கும் இதே போல 4 வேரியன்ட்கள் இருக்கிறது. அதில் அனைத்திற்கும் ஐந்து மாதம் வரை காத்திருப்பு காலம் உள்ளது.
பெட்ரோல் மேனுவல் முன்பக்க டிரைவ் மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் முன்பக்க டிரைவ் காருக்கு ஒரு மாதமும் டீசல் மேனுவல் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் காருக்கு 1.5 மாதமும் காத்திருப்பு காலம் உள்ளது மட்டுமே ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. இதில் ஏஎக்ஸ் 7 டெக் காருக்கு பெட்ரோல் ஆட்டோமேட்டிக் முன்பக்க வீல் டிரைவ் டீசல் மேனுவல் முன்பக்க வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் முன்பக்க வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் அளவில் ஒரு மாதம் காத்திருக்கும் மாடல் காருக்கு பெட்ரோல் ஆட்டோமேட்டிக் முன்பக்க வீல் டிரைவ் காருக்கு நான்கு மாதங்களும் டீசல் ஆட்டோமேட்டிக் முன்பக்க வீல் டிரைவ் டீசல் மேனுவல் முன்பக்க வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் ஆல்வீல் டிரைவ் ஆகிய கார்களுக்கு 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலங்கள் உள்ளது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 230எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது 185 எச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏஎக்ஸ் 7 டெக் மட்டும்ம் அனைத்து வேரியன்ட்களிலும் முன் வீல் டிரைவ் மட்டுமே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 13.66 முதல் ரூபாய் 24.98 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் உள்ள டாட்டா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரணம் நிச்சயமாக விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









