ஜனநாயகன் படத்துக்கு கூட இவ்ளோ பேர் டிக்கெட் புக் பண்ண மாட்டாங்க! உலகையே மிரள வைத்த மஹிந்திரா கார்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.

சொகுசு கார்களுக்கே சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் (12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை) போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

Mahindra XEV 9S Side View

அத்துடன் புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், டால்பி அட்மாஸ் உடன் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், 540 டிகிரி கேமரா மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இன்ஜின்கள் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.

Mahindra XUV 7XO

அத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியையும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் கொண்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் விலை வெறும் 13.66 லட்ச ரூபாயில் இருந்தே தொடங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் இன்று முதல் (ஜனவரி 14) தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை போலவே, சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) எலெக்ட்ரிக் காருக்கும், இன்று முதல் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த 2 கார்களும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்கள் என்பதால், முன்பதிவுகள் குவிந்துள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆகிய 2 கார்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 93,689 முன்பதிவுகள் குவிந்துள்ளன. இது இன்று மதியம் 2 மணி வரையிலான நிலவரம் ஆகும். எனவே கூடிய விரைவில் இந்த 2 கார்களுக்குமான ஒட்டுமொத்த முன்பதிவு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் டெலிவரி பணிகளை பொறுத்தவரையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் இன்று முதலே உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் ஜனவரி 26ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆகிய 2 கார்களும் இந்திய சந்தையில் விற்பனையில் சாதனைகளை படைக்க போகின்றன என்பது தற்போது வெளியாகியுள்ள முன்பதிவு எண்ணிக்கையிலேயே தெரிந்து விட்டது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு புதிய காரை முன்பதிவு செய்யவுள்ள வாடிக்கையாளர்கள், இந்த 2 கார்களையும் பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 17:33 [IST]
English summary
Mahindra xuv 7xo xev 9s receives over 93000 bookings check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+