ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.20 மட்டுமே செலவு! 7 பேர் போகலாம்! உலகையே மிரள விட்ட இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) எலெக்ட்ரிக் கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் உரிமையாளர் ஒருவர், தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்த காரை டெலிவரி எடுத்துள்ளார். vijaychoudhari2181 என்ற யூடியூப் (YouTube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Mahindra XEV 9S Delivery

இதில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் உரிமையாளர், தனது குடும்பத்துடன் ஷோரூமிற்கு வந்து, இந்து பாரம்பரிய முறைப்படி பூஜைகளை எல்லாம் செய்து, காரை டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை, மகளின் பிறந்த நாளை முன்னிட்டு டெலிவரி எடுத்ததற்காக, அதன் உரிமையாளருக்கு, நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 3 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. அவை 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 521 கிலோ மீட்டர்கள், 600 கிலோ மீட்டர்கள் மற்றும் 679 கிலோ மீட்டர்களாக உள்ளன.

Mahindra XEV 9S

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில், பனரோமிக் ஸ்கை ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், டால்பி அட்மாஸ் உடன் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், முன் பக்க டேஷ்போர்டில் தலா 31.24 செமீ அளவில் 3 திரைகள் (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை) போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் தவிர, அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 19.95 லட்ச ரூபாயாக உள்ளது. இது மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் குடும்பம் டெலிவரி எடுத்திருப்பது மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் பேக் த்ரீ எபோவ் 79 kWh என கூறப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 11.2 kW சார்ஜர் உடன் சேர்த்து 30.20 லட்ச ரூபாய் ஆகும். இதுதான் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியுள்ள நபர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த காரை நீங்கள் டெலிவரி எடுக்க வேண்டும் என்றால், தற்போதைய நிலையில், முன்பதிவு செய்த நாளில் இருந்து, 3-9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இந்த காத்திருப்பு காலமானது (Waiting Period), வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகள் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

அதேபோல் இயக்குவதற்கான செலவு (Running Cost) குறைவு என்பதும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.20 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என காடிவாடி தளம் கூறியுள்ளது. கூடவே இந்த எலெக்ட்ரிக் காரில் 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதால், மிகவும் குறைவான செலவிலேயே பயணங்களை மேற்கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 13, 2026, 16:47 [IST]
English summary
Man takes delivery of mahindra xev 9s on daughters birthday viral video
மேலும்... #mahindra #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+