4.50 லட்சம் ரூபாய் ஆன்-ரோடு விலையிலேயே இந்த புத்தம் புது காரை வாங்கிட்டு வந்துடலாம்!

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களுள் ஒன்று மாருதி ஆல்டோ K10. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் இரண்டாவது விலை குறைவான கார் ஆல்டோ. எஸ்யூவிக்கள் இந்திய சந்தையை அதிகளவு ஆக்கிரமிக்கத் தொடங்குவதற்கு முன்பாக ஆல்டோ இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இருந்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை பாதியாகக் குறைந்திருக்கிறது.

ஆல்டோவில் எந்தப் பிரச்சினையும் இல்லை, வாடிக்கையாளர்களின் மனநிலை வேறு வடிவங்களை நோக்கி போய் விட்டது அவ்வளவு தான். ஆனால், இருசக்கர வாகனங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற விரும்புபவர்களுக்கு மாருதி ஆல்டோ ஒரு மிகச் சிறப்பான தேர்வு. குறைவான விலையில் ஒரு நல்ல குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற கார் ஒரு கார் என்றால் ஆல்டோ தான் உங்களின் முதல் சாய்ஸாக இருக்கும்.

Maruti Alto K10

சரி, இந்தக் காரை இந்தியாவில் வாங்கினால் இதன் ஆன்-ரோடு விலை எவ்வளவு வரும். ஏனென்றால் அனைத்து இடங்களிலும் எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆஃப்-ரோடு விலைகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. அதனை வைத்து கார் வாங்குவதைக் கணக்கிட்டு ஷோரூமுக்குச் செல்லும் போது ஆன்-ரோடு விலையைக் கேட்டு ஏமாற்றமே மிஞ்சும். உண்மையில் இந்த ஆல்டோ K10 காரை வாங்க வேண்டும் என்றால் கையில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும்?

மாருதி ஆல்டோ K10: வேரியன்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

முதலில் இந்த ஆல்டோ K10 காரின் வேரியன்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை குறித்த விவரங்களை முழுமையாகப் பார்த்துவிடலாம். இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் காரை ஸ்டாண்டர்டு (O), LXi (O), VXi (O), VXi (O)+ என நான்கு வேரியன்ட்களாக மாருதி விற்பனை செய்து வருகிறது. இதில் இடைநிலை LXi (O) மற்றும் VXi (O) ஆகிய இரண்டு வேரியன்ட்களும் CNG பவர்ட்ரெயின் தேர்வுடனும் கிடைக்கிறது.

Maruti Alto K10

மேனுவல் கியர்பாக்ஸ் வசதி CNG பவர்ட்ரெயின் வேரியன்ட்கள் உட்பட அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படுகிறது. டாப் எண்டு VXi (O) மற்றும் VXi (O)+ ஆகிய வேரியன்ட்களுடன் மட்டும் AGS, அதாவது ஆட்டோமேட்டட் கியர் ஷிப்ட் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியை ஆல்டோ K10 காரில் மாருதி கொடுக்கிறது.

இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் காரானது 3.70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. CNG பவர்ட்ரெயின் கொண்ட ஆல்டோவை 4.82 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆல்டோவை 4.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் நாம் வாங்கலாம்.

ஆன்-ரோடு விலை எவ்வளவு?

ஆல்டோ K10 லைன்-அப்பில் அடிப்படையான ஸ்டாண்டர்டு (O) வேரியன்டின் ஆன்-ரோடு விலை எவ்வளவு என்பதைப் பார்க்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை + சாலை வரி + RTO மற்றும் பதிவுக் கட்டணம் + இன்சூரன்ஸ் ஆகியவை எல்லாம் சேர்ந்தது தான் ஆன்-ரோடு விலை. இதில் சாலை வரியும், இன்சூரன்ஸ் கட்டணமும் தான் பெரிய தொகையாக இருக்கும்.

தமிழ்நாட்டில் 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளான கார்களுக்கு (எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து) 12 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது ஒவ்வொரு காருக்கும், காரின் வேரியன்டின் விலைக்கு ஏற்பவும் மாறும். இன்சூரன்ஸ் ப்ரீமியமும் இன்ஜின் அளவு, காரின் அளவு மற்றும் பேட்டரி அளவிற்கு ஏற்ப மாறுபடும். மேலும், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனமும் ப்ரீமியம் மாறுபடும்.

ஆல்டோ K10 காரின் அடிப்படை வேரியன்டிற்கு சாலை வரியாக 44,382 ரூபாய், இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 20,500 ரூபாய், இதர செலவுகளாக 10,000 ரூபாய் (இதனையும் சேர்த்துக் கொள்வோம், ஏனென்றால் கார் வாங்கும் போது சில அக்சஸரீஸ்களை வாங்கினால் நன்றாக இருக்கும் என டீலர்ஷிப்கள் பரிந்துரை செய்யும், நாமும் குறைவான விலை தானே என வாங்கி விடுவோம்) எல்லாம் சேர்த்தால் 4.44 லட்சம் ரூபாய் ஆன்-ரோடு விலை வருகிறது.

அதிகபட்சமாக இன்னும் சில ஆயிரங்கள் நம்முடைய கணக்கில் கூடுதல் குறைச்சலாக இருந்தாலும் 4.50 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் புத்தம் புதிய மாருதி ஆல்டோ K10 காரை நீங்கள் வீட்டிற்கு ஓட்டி வந்துவிடலாம். இங்கே ஏன் தோரயமான கணக்கீடு எனக் கேட்கிறீர்களா. எக்ஸ்-ஷோரூம் விலை, இன்சூரன்ஸ் ப்ரீமியம் மற்றும் இதர சில கட்டணங்கள் ஒவ்வொரு நகரத்திற்கும் மாறக்கூடியவை. எனவே தான் முன்னெச்சரிக்கையாக தோராயமாகக் கணக்கிட்டிருக்கிறோம்.

எப்படிப் பார்த்தாலும் ஆல்டோ K10 காரின் அடிப்படை வேரியன்டை 4.50 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் கண்டிப்பாக நீங்கள் வாங்கிவிட முடியும். இதுவே அதற்கு அடுத்து இருக்கும் LXi(O) வேரியன்டை வாங்குறீர்கள் என்றால் 4.80 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். VXi(O) வேரியன்ட் என்றால் 5.40 லட்சம் ரூபாய் வரையிலும், VXi(O)+ வேரியன்ட் என்றால் 6 லட்சம் ரூபாய் வரையிலும் ஆன்-ரோடு விலை இருக்கும்.

இதுவரை நாம் பார்த்தது மேனுவல் வேரியன்ட்களுக்கான விலைகள். VXi (O) ஆட்டோமேட்டிக் வேரியன்ட் என்றால் ஆன்-ரோடு விலை 5.92 லட்சம் ரூபாய் வரையிலும், VXi (O)+ ஆட்டோமேட்டிக் என்றால் 6.55 லட்சம் ரூபாய் வரையிலும் ஆன்-ரோடு விலை இருக்கும். ஆல்டோவின் CNG வேரியன்ட்களை 5.80 லட்சம் ரூபாய் மற்றும் 6.41 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் நீங்கள் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆன்-ரோடு விலையை விட சில ஆயிரங்கள் வரை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால் இந்த விலையை நீங்கள் ஆங்கர் பாயிண்டாக வைத்து கார் வாங்குவதைக் கண்டிப்பாகத் திட்டமிடலாம். வீட்டியேலே இந்த ஆன்-ரோடு விலைக்கு ஏற்ப பட்ஜெட்டை திட்டமிட்டீர்கள் என்றால், ஷோரூமின் ஆன்-ரோடு விலையைக் கண்டு கண்டிப்பாக ஏமாற்றமடைய மாட்டீர்கள்.

Article Published On: Sunday, July 5, 2026, 5:47 [IST]
English summary
Maruti alto k10 entry level hatchback on road price full details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out