33 கி.மீ மைலேஜ்! இந்த 2 காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் இரண்டு கார்கள் மட்டும் நல்ல விற்பனையை பதிவு செய்து வளர்ச்சியை பெற்றுள்ளன. இது குறித்து விரிவான விபரங்களை தான் காணப்போகிறோம். கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 2.36 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 2.36 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2.23 லட்சம் கார்களை விற்பனை செய்த நிலையில் தற்போது விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்கள் தான் குறைந்த விலையில் விற்பனையாகி வரும் கார்களாக இருக்கிறது. இந்த கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

Maruti Alto S-Presso Sales 2025

மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்கள் அந்நிறுவனத்தில் மினி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு கார்களும் சேர்த்து மொத்தம் 14,268 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14,247 கார்கள் விற்பனையாகிருந்தது. மிக குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனை அதிகரித்து இருந்தாலும் விற்பனை அப்படியே இருப்பது கூட ஒரு வகையில் இந்த செக்மெண்டில் வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த செக்மெண்ட் மற்ற நிறுவனங்களில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காரை பொறுத்த வரை ரூபாய் 3.50 லட்சம் என்ற விலையிலும் எஸ்பிரெஸ்ஸோ கார் ரூ 3.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆல்டோ கார் அந்நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட ஹார்ட்டிரெட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த காரில் புதிய தலைமுறை கே சிரீஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது .1.0 லிட்டர் டூயல் ஜெட் டூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 66.62 பிஎஸ் பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 204.90 கிலோமீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் வேரியண்டிலும் 24.39 கிலோமீட்டர் மைலேஜ் மேனுவல் வேரியண்டிலும் 33.85 கிலோமீட்டர் மைலேஜ் சிஎன்ஜி வேரியண்டிலும் கிடைக்கிறது.

Maruti Alto S-Presso Sales 2025

ஆல்டோ கே10 காரில் 7 in ப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதே சிஸ்டம் தான் எஸ் பிரெஸ்ஸோ வேகன் ஆர் ஆகிய கார்களிலும் உள்ளன. இதில் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சிஸ்டம்கள் சப்போர்ட் செய்யப்படுகிறது. இதுபோக ப்ளூடூத் மற்றும் ஆடியோ சிஸ்டத்தையும் கனெக்ட் செய்யும் ஆடியோ சிஸ்டத்துடன் கண்ட்ரோல் இணைக்கப்படும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த காரில் பாதுகாப்புக்காக உள்ளன.

இந்த காரின் பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதுபோக ஆட்டோ டோர் லாக் ஆகிய ஆப்ஷனும் உள்ளது. இந்த கார் மொத்தம் ஆறு விதமான கலர் ஆப்ஷன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

Maruti Alto S-Presso Sales 2025

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை பொறுத்தவரை 1.0லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பி எஸ் பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது இதிலும் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கிறது. 56.69 பி எஸ் பவரும் 82.1 என் எம்டார்க் திறனும் கிடைக்கும் வகையில் உள்ளது. இதில் மேனுவல் மட்டுமே ஒரே ஆப்வுனாக உள்ளது. பெட்ரோல் மேனுவல் 24 கிலோமீட்டர் மைலேஜ் பெட்ரோல் ஏஎம்டியில் 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் சிஎன்ஜியில் 32.23 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த இரண்டு கார்களும் நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இருந்தாலும் இந்த கார்கள் ஹேட்ச் பேக் ரக கார்களாக இருப்பதால் விற்பனை குறைவு காரணமாக இறங்கி வந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த காரின் விலை குறைந்ததால் தற்போது விற்பனை அதிகரித்து உள்ளது. இது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஒரே அளவிலான விற்பனை இருப்பதே நிச்சயம் பெரிய விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 3, 2026, 17:05 [IST]
English summary
Maruti alto s presso sales 2025 record january sales
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X