புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்: அடாஸ் முதல் சிஎன்ஜி ஏஎம்டி வரை... எதிர்பார்க்கப்படும் 7 முக்கிய விஷயங்கள்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ கார் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை கவரவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், சில முக்கிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய மாருதி பலேனோ கார் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரும் செப்டம்பர் 5ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பல முக்கிய மாற்றங்களுடன் வருவதால், பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோரின் பட்டியலில் முக்கிய தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், வடிவமைப்பு, எஞ்சின் மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய மாடலில் எதிர்பார்க்கப்படும் 7 முக்கிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

1. டிசைன் மாற்றம்

புதிய பலேனோ காரின் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதேநேரத்தில், முன்புறத்தில் க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்புகளில் மாற்றங்கள் இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக உறுதியாகி இருக்கிறது. அதேபோன்று, பக்கவாட்டில் புதிய டிசைனில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட உள்ளன. பின்புறத்தில் பம்பரில் சிறிய மாற்றங்களும், டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் சிறிய திருத்தங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

2. எஞ்சின் மாற்றம்

இதுவரை பலேனோ காரில் 4 சிலிண்டர் அமைப்புடைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

3. சிஎன்ஜி தேர்வில் ஏஎம்டி கியர்பாக்ஸ்

புதிய மாருதி பலேனோ காரின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக, சிஎன்ஜி எரிபொருள் வகையில் மேனுவல் மட்டுமின்றி, முதல்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது. இதனால், தனிநபர் பயன்பாட்டுப் பிரிவு வாடிக்கையாளர்களை மிக எளிதாக கவரும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய சிஎன்ஜி மாடலானது அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

4. வென்டிலேட்டட் இருக்கைகள்

இந்தியாவின் தட்ப வெப்பத்தை கருத்தில்கொண்டு முன்புறத்தில் குளிர்ச்சியை வழங்கும் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படலாம். இது பயணிகளுக்கு அதிக சவுகரியத்தை தரும் என்பதுடன், இந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் மதிப்பை உயர்த்தும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜரும் இடம்பெறும் என தெரிகிறது.

Also Read

5. அடாஸ் வசதி

டாப் வேரியண்ட்டில் அடாஸ் வசதியும் அளிக்கப்படும். கண்ணுக்குப் புலப்படாத பகுதிகளில் வரும் வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ரிவர்ஸ் எடுக்கும்போது பின்புறம் வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கை வசதியும் இருக்கும்.

6. இதர வசதிகள்

புதிய மாருதி பலேனோ காரில் சன்ரூஃப், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு உயரிய அம்சங்களும் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், பெரும்பாலான வசதிகள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்படும்.

7. புதிய டாப் வேரியண்ட்

மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரில் Alpha (O) என்ற விலை உயர்ந்த புதிய டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதில்தான் அடாஸ் உள்ளிட்ட பல உயரிய அம்சங்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சிக்மா, டெல்டா, ஸீட்டா, ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைத்த நிலையில், தற்போது ஆல்ஃபா ஆப்ஷன் பேக்கும் சேர்ந்து 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

குறிப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வசதிகள் மற்றும் மாற்றங்கள் மாருதி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புதிய பலேனோவின் முழுமையான வசதிகள், வேரியண்ட் விவரங்கள் மற்றும் விலை ஆகியவை அதிகாரப்பூர்வ அறிமுகத்தின்போது மட்டுமே உறுதி செய்யப்படும்.

Article Published On: Friday, August 21, 2026, 12:10 [IST]
English summary
Maruti baleno facelift 2026 expected new features changes
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out