ரூ.6.10 லட்சத்தில் புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிக சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள், புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ள இந்த காருக்கு ரூ.6.10 லட்சம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் டெலிவிரிப் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

புதிய மாருதி பலேனோ காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களை தொடர்ந்து தற்போது பலேனோ காரிலும் இந்த எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Maruti Baleno Facelift

அத்துடன், சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் புதிய மாருதி பலேனோ கார் வந்துள்ளது. இந்த எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. டாடா அல்ட்ராஸ் காருக்கு அடுத்து சிஎன்ஜி ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் இந்த காரும் கிடைக்கும்.

புதிய மாருதி பலேனோ காரில் புதிய முகப்பு க்ரில் அமைப்பும், பம்பர் டிசைனும் முக்கிய மாற்றமாக கூறலாம். அத்துடன், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், லோகோ இடம் மாற்றம் உள்ளிட்டவையும் முகப்பில் மாற்றங்களாக தெரிகின்றன. இதனால், இந்த கார் புதுப்பொலிவுடன் தெரிகிறது. 16 அங்குல அலாய் வீல்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் 3,990 மிமீ நீளமும், 2,520மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக வந்துள்ளது.

Maruti Baleno Facelift

இந்த காரில் புதிய 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கருப்பு வண்ண இன்டீரியரில் நீலம் மற்றும் சில்வர் வண்ண பாகங்களுடன் பிரிமீயமாக இருக்கும். செயற்கை லெதர் அப்ஹோல்ட்ஸ்ட்ரி மற்றும் இருக்கைகளும் முக்கிய அம்சங்களாக கூறலாம். முன்புறத்தில் குளிர்ச்சி தரும் வென்டிலேட்டட் வகை இருக்கைகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா, கீலெஸ் என்ட்ரி என பல வசதிகள் விலை உயர்ந்த வேரியணட்டில் கிடைக்கும்.

புதிய மாருதி பலேனோ காரில் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பமும் முக்கியமானதாக குறிப்பிடலாம். இதன்மூலமாக, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அவசர கால பிரேக்கிங் சிஸ்டம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அத்துடன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சஙகள் உள்ளன.

Article Published On: Saturday, September 5, 2026, 21:17 [IST]
English summary
Maruti baleno facelift 2026 launched india price features specs
மேலும்... #maruti suzuki #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out