செப்டம்பர் 5ல் புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி பலேனோ கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வரும் செப்டம்பர் 5ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், மாருதி நிறுவனம் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

டீசரை வைத்து பார்க்கும்போது தற்போது உள்ள பலேனோ காரை தோற்றத்தை ஒத்திருந்தாலும், சில டிசைன் மாறுதல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, மறுவடிவமைப்புடன் கூடிய பம்பர், ஹெட்லைட் டிசைனிலும் மாறுதல்கள் இருக்கும். டெயில் லைட் டிசைனிலும் மாறுதல்கள் இடம்பெறும். ஆனால், காரின் ஒட்டுமொத்த டிசைனில் பெரிய அளவில் மாறுதல்கள் இருக்காது.

(Representaitve Image - Current Maruti Baleno)

உட்புறத்தில் புதிய வண்ணத்திலான இன்டீரியர் தீம், கூடுதல் தரத்தில் அப்ஹோல்ஸ்ட்ரி, சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்களாக இடம்பெறும். அதேநேரத்தில், டேஷ்போர்டு டிசைனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 6 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம் போன்ற அம்சங்களும் முக்கிய அம்சங்களாக தக்க வைக்கப்படும்.

மாருதி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எஞ்சினில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். இந்த எஞ்சின் 90 எச்பி பவரை வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லுத 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் வரும். இந்த மாடலானது 77.5 எச்பி பவருடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

தற்போது விற்பனையில் உள்ள மாருதி பலேனோ கார் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலானது சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

டிசைன், வசதிகள், இடவசதி போன்றவற்றில் சிறப்பானதாக இருப்பதால், பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முதன்மையான மாடலாகவும் இருந்து வருகிறது. வரும் செப்டம்பர் 5ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், டீலர்களில் முன்பதிவு அதிகாரப்பூர்வ முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிகிறது.

Article Published On: Sunday, August 16, 2026, 10:05 [IST]
English summary
Maruti baleno facelift launch september 5 2026
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out