வெறும் 6 லட்சம் ரூபாயில் 31 கிமீ மைலேஜ் கொடுக்கக்கூடிய மாருதி கார் விரைவில் அறிமுகம்

இந்தியாவில் ஹேட்ச்பேக் வகை கார்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு சில நிறுவனங்களுள் மாருதி முக்கியமான ஒன்று. குறைவான விலை கொண்ட அடிப்படையான ஹேட்ச்பேக் கார்களை மட்டும் விற்பனை செய்யாமல், கொஞ்சம் ப்ரீமியமான வசதிகளை வேண்டும் வாடிக்கையாளர்களுக்கும் சற்று ப்ரீமியமான வசதிகளுடனும் ஹேட்ச்பேக் காரை மாருதி விற்பனை செய்து வருகிறது. அது வேறெதுவும் இல்லை பெலினோ தான்.

தற்போது இரண்டாம் தலைமுறை வடிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பெலினோ ஹேட்ச்பேக் காருக்கு புதிய அப்டேட்களை வழங்கி ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளது மாருதி சுஸூகி. இந்த மேம்படுத்தப்பட்ட பெலினோ ஃபேஸ்லிப்ட் மாடலானது இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி வரும் போது ஸ்பைஷாட்களிலும் சிக்கியிருக்கிறது. இந்த ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலம் புதிய பெலினோவில் மாருதி என்னென்ன மேம்பாடுகள் அல்லது மாற்றங்களை எல்லாம் செய்யலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

Maruti Baleno

அந்த வகையில் புதிய பெலினோ மாடலானது டிசைன் அளவில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்பது மட்டும் இப்போது உறுதியாகத் தெரிகிறது. குறிப்பாக முன்பக்கம் முகப்பு விளக்குகள், DRLகள், ஃபாக் விளக்குகள், கிரில் மற்றும் பம்பர்கள் ஆகியவற்றின் டிசைன் சற்றே மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் என்பதை ஸ்பைஷாட் புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சோதனையின் போது தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 16 இன்ச் அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வெளியீட்டின் போது இதிலும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பக்கம் விளக்குகளின் டிசைன் தற்போதிருக்கும் பெலினோவில் கொடுக்கப்பட்டிருப்பது போலவே தான் இருக்கிறது. ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர்களிலும் எந்த வேறுபாடும் இருக்க வில்லை. பம்பர் மற்றும் பின்பக்கமும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டதைப் போலவே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பெலினோ ஹேட்ச்பேக்கின் டிசைனில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஆங்காங்கே சின்னச் சின்ன மேம்பாடுகளை மட்டும் மாருதி செய்து வருவது தெரிகிறது.

Maruti Baleno

ஃபேஸ்லிப்ட் என்பதால் சில புதிய வசதிகளின் அறிமுகத்தை புதிய பெலினோவில் நாம் எதிர்பர்க்கலாம். குறிப்பாக போட்டியாளர்களிடம் இருக்கும் சிங்கிள் பேன் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய வசதிகள் புதிய பெலினோவில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன் தற்போதைய மாடலில் கொடுக்கப்பட்டு வரும் MID, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 9 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் புதிய பெலினோவிலும் கடத்தப்படும்.

பவர்ட்ரெயின் வாரியாக எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.2 லிட்டர், NA பெட்ரோல் இன்ஜினே புதிய பெலினோ ஹேட்ச்பேக் காரிலும் கொடுக்கப்படவிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜினானது 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த கார் லைன்-அப்பில் CNG பவர்ட்ரெயின் கொண்ட வேரியன்ட்களும் உள்ளது. மேலே பார்த்த இன்ஜினானது CNG எரிபொருளில் இயங்கும் போது 77.5 hp பவர் மற்றும் 98.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. CNG பவர்ட்ரெயினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

புதிய மேம்பாடுகளுடன் தற்போதிருப்பதை விட சற்று கூடுதல் விலையிலும் புதிய பெலினோ ஹேட்ச்பேக்கை மாருதி வெளியிடும். தற்போது 5.99 லட்சம் ரூபாய் முதல் 9.10 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக். ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்ஸா மற்றும் டாடா ஆல்ட்ராஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கிறது மாருதி பெலினோ.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையில் இருக்கக்கூடிய மிகச் சில ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் பெலினோவும் ஒன்று. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற காராகவும் இது இருக்கிறது. இதனாலேயே அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்கள் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து விடுகிறது. புதிய அப்டேட் பெலினோவின் விற்பனையை மேலும் உயர்த்தவே செய்யும்.

Article Published On: Tuesday, May 19, 2026, 10:12 [IST]
English summary
Maruti baleno facelift to launch in india soon with new features
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+