வியக்க வைக்கும் புதிய பலேனோ காரின் மைலேஜ்... இந்த விஷயத்துல மாருதியை அடிச்சுக்க முடியாது!!

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான புதிய மாருதி பலேனோ அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.10 லட்சம் ஆரம்ப விலையில் வந்துள்ள இந்த புதிய மாடலில் டிசைன் மற்றும் வசதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், முக்கியமாக புதிய Z12E என்ற புதிய தொழில்நுட்ப வகை பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய மாருதி பலேனோ காரின் மைலேஜ் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறி இருக்கிறது. ஆம், புதிய மாருதி பலேனோ காரின் புதிய 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Maruti Baleno Facelift

அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.80 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது எரிபெருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த சிறப்பான மைலேஜ் விஷயம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக உள்ளது. இது சோதனை நிலைகளில் கொடுக்கப்படும் மைலேஜ் என்றாலும், நடைமுறையிலும் லிட்டருக்கு 17 முதல் 20 கிமீ மைலேஜ் வரை எதிர்பார்க்க முடியும்.

Also Read

இதற்கு முன் விற்பனையில் இருந்த 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுடன் ஒப்பிடும்போது இது முறையே 6.4 சதவீதம் மற்றும் 7.9 சதவீதம் வரை புதிய மாடலில் மைலேஜ் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நகரப் பயன்பாட்டில் தினசரி காரை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மைலேஜ் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக ஆட்டோமேட்டிக் காரை விரும்புபவர்களுக்கு லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜ் என்பது நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

புதிய பலேனோ காரில் 1,197cc Z12E பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும் 112 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கார் நின்ற நிலையில் இருந்தால் தானியங்கி முறையில் எஞ்சினை அணைத்து மீண்டும் க்ளட்ச் மிதிக்கும்போது எஞ்சின் ஸ்டார்ட் ஆகும் Idle Start-Stop தொழில்நுட்பமும் கூடுதல் எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும்.

Also Read

புதிய பலேனோ காரின் சிஎன்ஜி மாடலிலும் இதே 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலும் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 33.61 கிமீ மைலேஜ் வரை தரும் என சோதனை நிலைகளின் சான்றுபடி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைக் காட்டிலும் சிஎன்ஜி மாடலின் எரிபொருள் சிக்கனம் 9.8 சதவீதம் கூடுதல் என மாருதி தெரிவித்துள்ளது.

மைலேஜ் மட்டுமின்றி பாதுகாப்பு மற்றும் வசதிகளிலும் புதிய பலேனோ கவனம் செலுத்துகிறது. இந்த புதிய பலேனோ காரில் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், டயர்பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தவிரவும், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 9 அங்குல தொடுதிரையுடன் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட பிரீமியம் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. பண்டிகை காலத்தில் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக தன்னை முன்னிறுத்தும் அனைத்து அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

Article Published On: Monday, September 7, 2026, 10:39 [IST]
English summary
Maruti baleno mileage 24 77 kmpl 33 61 km kg cng new engine features
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out