6 லட்சம் ரூபாய்க்கு மைலேஜை அள்ளிக் கொடுக்கும் ஒரு கார்.. நிறைய விக்கும்னு தான நினைக்கிறீங்க?

இந்தியாவில் சில கார்களுக்கு மாறாத மவுசு உண்டு. அவை என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் அந்த மவுசு அப்படியே தான் இருக்கும். அப்படியான கார்களில் ஒன்று மாருதியின் பெலினோ (Maruti Baleno). ப்ரீமியமான ஹேட்ச்பேக் கார் ஒன்றை சற்று குறைவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சாய்ஸாக பெலினோவே இருந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களில் தொடர்ந்து டாப் 10 இடங்களுக்குள் இருந்து வருகிறது இந்த பெலினோ ஹேட்ச்பேக். மேலும் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் வேகன் ஆருக்கு இணையாக இந்த பெலினோவும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Maruti Baleno

கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 18,306 பெலினோ கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மாருதி. இது வேகன் ஆரை விட 342 யூனிட்டுகள் மட்டுமே குறைவு. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிறிய கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது மத்திய அரசு. இதனால் இந்தக் கார்களின் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்தது. அந்த வரிசையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது பெலினோ ஹேட்ச்பேக்கின் விற்பனை 38.89 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் 13,180 பெலினோ கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 18,306 யூனிட்டுகள் விற்பனையுடன் ஹேட்ச்பேக் பிரிவில் 19.09 சதவீதம் சந்தைப் பங்குகளையும் மாருதி கைப்பற்றியிருக்கிறது. கொசுறுத் தகவல், ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் நான்கு கார்கள் மாருதி நிறுவனத்தினுடையது தான்.

Maruti Baleno

இந்தியாவில் தற்போது 5.99 லட்சம் ரூபாய் முதல் 9.10 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஹேட்ச்பேக் காரை மாருதி விற்பனை செய்து வருகிறது. விரைவில் இந்த பெலினோவின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிடவும் மாருதி திட்டமிட்டு வருகிறது. தற்போது அந்தப் புதிய காரினை இந்திய சாலைகளில் மாருதி சோதனை செய்யத் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காரில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜினானது 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

இந்த ஹேட்ச்பேக்கில் CNG பவர்ட்ரெயின் தேர்வும் உண்டு. CNG எரிபொருளில் இயங்கும் மேலே குறிப்பிடப்பட்ட இதே இன்ஜின், 77.5 hp பவர் மற்றும் 98.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த CNG பவர்ட்ரெயினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே.

இந்த பெலினோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் ஹூண்டாய் i10, டாடா ஆல்ட்ராஸ் மற்றும் டொயோட்டா கிளான்ஸா உள்ளிட்ட மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்குப் போட்டியாக மாருதி விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா கிளான்ஸா, இந்த மாருதி பெலினோவின் ரீபேட்ஜ்டு மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல சற்று ப்ரீமியமாக கூடுதல் வசதிகளுடன் ஒரு கார் வாங்க வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பெலினோ சிறந்த தேர்வாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் இந்த பெலினோ ஹேட்ச்பேக்கை நம்பி வாங்கி வருகிறார்கள். இந்த பெலினோ ஹேட்ச்பேக்கின் CNG மாடலானது 30 கிமீ வரையிலான மைலைஜையும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, May 25, 2026, 19:52 [IST]
English summary
Maruti baleno sales report april 2026 volume car for maruti suzuki
மேலும்... #maruti suzuki #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out