ரூ.7.39 லட்சம் என்ற சவாலான விலையில் புதிய மாருதி பிரெஸ்ஸா கார் அறிமுகம்... போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி பிரெஸ்ஸா கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்த பிரெஸ்ஸா கார் வெளிப்புற டிசைனில் லேசான மாற்றங்கள், கேபினில் புதிய தொழில்நுட்ப வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு ஆகியவற்றுடன் இந்த அப்டேட் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

டிசைன் மாற்றங்கள்

முதல் பார்வையில் பிரெஸ்ஸாவின் அடையாள வடிவமைப்பு அப்படியே தொடர்கிறது. இருப்பினும், புதிய முன்புற கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மாற்றியமைக்கப்பட்ட LED விளக்குகள் மற்றும் புதிய 16 இன்ட் டியூவல் டோன் அலாய் வீல் டிசைன் போன்ற மாற்றங்கள் இந்த காருக்கு மேலும் பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. பின்புறத்திலும் லேசான காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பழைய மாடலை விட இது சற்று புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

Maruti Brezza Facelift Launch Image

இன்டீரியர்

கேபினுக்குள் நுழைந்தவுடன் அதிக மாற்றங்கள் தெரிகின்றன. பெரிய 10.1 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய டேஷ்போர்டு அமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, ஏர் பியூரிஃபயர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டர்போ என்ஜின் தேர்வு

இந்த அப்டேட்டின் மிக முக்கியமான அம்சமாக புதிய 1.0 லிட்டர் Boosterjet டர்போ-பெட்ரோல் என்ஜின் புதிதாக தேர்வுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறனையும், மேம்பட்ட ஓட்ட அனுபவத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்விலும் கிடைக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 139 என்எம் டார்க்கையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். சில வேரியண்ட்களில் CNG தேர்வும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைலேஜ் விபரம்

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட LXi மற்றும் VXi வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.09 கிமீ மைலேஜையும், ZXi மற்றும் ZXi Plus வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 20.81 கிமீ மைலேஜையும் வழங்கும் என சோதனை நிலைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டானது லிட்டருக்கு 20.17 கிமீ மைலேஜையும், மேனுவல் மாடலானது லிட்டருக்கு 20.81 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட்டுகள் கிலோவுக்கு 26.8 கிமீ மைலேஜை வழங்கும் என சோதனைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Maruti Brezza Side Profile

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பிலும் மாருதி சுஸுகி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வேரியண்ட்டுகளை பொறுத்து இடம்பெற்றுள்ளன. மேலும், புதிய டர்போ என்ஜின் மாடலில் பிளைன்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் க்ராஸ் டிராஃபிக் அலர்ட், முன்புற பார்க்கிங் சென்சார்கள் போன்றவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் Bharat NCAP சோதனையில் பிரெஸ்ஸா பெற்ற 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடும் இந்த மாடலின் முக்கிய பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வண்ணத் தேர்வுகள்

புதிய மாருதி பிரெஸ்ஸா காரில் சில்வர், சிவப்பு, வெள்ளை, சாம்பல், கருப்பு, ஆரஞ்ச், பீஜ் ஆகிய ஒற்றை வண்ணப்பூச்சு கொண்ட தேர்வுகளிலும், பீஜ்- சிவப்பு மற்றும் கருப்பு வண்ண மேற்கூரையுடன் வெள்ளை ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

Maruti Brezza Facelift Price

வாரண்டி

புதிய மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ தூரத்திற்கான ஸ்டான்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு நெருக்கடி

இந்த அப்டேட்டுகளுடன் புதிய மாருதி பிரெஸ்ஸா கார் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், ஹூண்டா வெனியூ, கியா சோனட், மஹிந்திரா எக்ஸ்யூவி3எக்ஸ்ஓ, ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாக தொடரும். குறிப்பாக புதிய டர்போ இன்ஜின் மற்றும் கூடுதல் வசதிகள், செயல்திறனையும் தொழில்நுட்ப அம்சங்களையும் முக்கியமாகக் கருதும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

போட்டி அதிகரித்து வரும் சப்-4 மீட்டர் எஸ்யூவி சந்தையில் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொள்ள மாருதி சுஸுகி எடுத்துள்ள முக்கிய முயற்சியாக இந்த புதிய காருக்கான அப்டேட்டுகள் பார்க்கப்படுகிறது. புதிய டர்போ இன்ஜின், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இணைந்திருப்பதால், புதிய காம்பாக்ட் SUV வாங்க திட்டமிடுபவர்களின் பட்டியலில் புதிய மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் முக்கிய இடம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Article Published On: Friday, July 24, 2026, 21:11 [IST]
English summary
Maruti brezza facelift launched india turbo petrol features variants price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X