மேம்படுத்தப்பட்ட புதிய எஸ்யூவியை குறைவான விலையில் வெளியிடும் மாருதி

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான பிரெஸ்ஸாவை மாருதி அப்டேட் செய்யவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்த நிலையில், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய எஸ்யூவியை மாருதி எப்போது வெளியிடவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ஜூலை 23ம் தேதியன்று இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி சுஸூகி.

வழக்கமாக உப்பு சப்பில்லாத ஃபேஸ்லிப்ட் அப்டேட்டாக இல்லாமல் இந்த முறை பல்வேறு தனித்துவமான புதிய அம்சங்களுடன் பிரெஸ்ஸா எஸ்யூவி அப்டேட் செய்யப்படவுள்ளது. குறிப்பாக புதிய இன்ஜினை பிரெஸ்ஸாவிற்கு கொடுக்கவிருக்கிறது மாருதி. தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் பெட்ரோல் + CNG ஆகிய இரண்டு பவர்ட்ரெயின் தேர்வுகளே பிரெஸ்ஸாவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் மூன்றாவதாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் மாருதி கொடுக்கவிருக்கிறது.

Maruti Brezza

இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் புதிது ஒன்றும் கிடையாது. ஏற்கனவே மாருதி ஃபிராங்க்ஸ் எஸ்யூவியில் நாம் பார்த்து வரும் ஒன்று தான். மாருதியின் லைன்-அப்பிலேயே ஃபிராங்க்ஸ் எஸ்யூவியில் மட்டுமே இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜினை பிரெஸ்ஸாவிற்கும் கொடுக்கவிருக்கிறது மாருதி.

1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருப்பதால் இதுவரை பிரெஸ்ஸாவிற்கு சப்-4 மீட்டர் எஸ்யூவிக்களுக்குக் கிடைக்க வேண்டிய வரிச்சலுகைகள் கிடைக்காமல் இருந்த வந்தது. ஆனால் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பயன்பாடு, பிரெஸ்ஸாவின் மீதான வரியை 40 சதவீதத்தில் இருந்து வெறும் 18 சதவீதமாகக் குறைக்கும். இதன் காரணமாக மிகவும் குறைவான விலையிலேயே டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸா விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Brezza

இந்தப் புதிய இன்ஜின் கொடுக்கப்படுவதுடன், வழக்கமான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொடுக்கப்படுவது ஆகியவையும் பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் இருக்கும். இந்தப் புதிய காரில் நாம் எதிர்பார்க்கும் மற்றுமொரு சுவாரஸ்யமான அம்சம் அண்டர்பாடி CNG டேங்க். தற்போது இந்தியாவில் நீங்கள் எந்த CNG காரை வாங்கினாலும், அதன் டேங்க் பூட் ஸ்பேஸை அடைத்துக் கொண்டிருக்கும்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிதாக தாங்கள் வெளியிட்ட விக்டோரிஸ் எஸ்யூவியில் CNG டேங்கையும் பெட்ரோல் டேங்க் போலவே, காருக்கு அடியிலேயே மாருதி கொடுத்திருந்தது. இதன் மூலம் CNG காரிலும் வழக்கமான கார் போலவே பூட் ஸ்பேஸை பயன்படுத்த முடிகிற வகையில் மாருதி வடிவமைத்திருந்தது. இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வசதியினை புதிய பிரெஸ்ஸாவின் CNG வெர்ஷனிலும் மாருதி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களே புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கின்றன. இவையே புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டை அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒன்றாகவும் மாற்றியிருக்கின்றன. இப்போதே நல்ல விற்பனையைப் பதிவு பிரெஸ்ஸா பதிவு செய்து வரும் நிலையில், அப்டேட்டிற்கு பின்பு இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த மாருதி சப்-காம்பேக்ட் எஸ்யூவியானது 8.26 லட்சம் ரூபாய் முதல் 13.01 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் எஸ்யூவியானது இதனை விட கொஞ்சம் கூடுதல் விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய எஸ்யூவி எப்படி இருக்கும், என்ன விலையில் வெளியாகும், குறிப்பாக டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸா என்ன விலையைக் கொண்டிருக்கும் என இப்போதே எதிர்பார்ப்பு எகிறுகிறது. 8 லட்சம் ரூபாய்க்கும் கீழான விலையில் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மாருதியும் எதிர்பர்ப்பதை விட குறைவான விலையிலேயே புதிய இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸாவை விற்பனைக்குக் கொண்டு வரும் எனத் தெரிகிறது.

Article Published On: Monday, June 29, 2026, 20:43 [IST]
English summary
Maruti brezza sub compact suv updated facelift launching on july 23 in india
மேலும்... #maruti suzuki #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out