அதிரடியாக விலை குறையப் போகும் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி.. உடனே வாங்குறதுக்கு ரெடியாகுங்க மக்களே!

இந்தியாவில் சப்-4 மீட்டர் எனச் சொல்லப்படும் சப்-காம்பேக்ட் கார்களுக்கு மவுசு அதிகம். காரணம், 4 மீட்டர்களுக்குக் குறைவான நீளம் கொண்ட கார்கள் மீது குறைவான வரியையே மத்திய அரசு விதித்து வருகிறது. இதன் காரணமாக, குறைவான விலையிலும் இந்த அளவிலான கார்களை நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியும். இதனாலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்களும் இந்த சப்-4 மீட்டர் அல்லது சப்-காம்பேக்ட் கார்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக், கியா சோனெட் ஆகியவற்றை இந்த சப்-காம்பேக்ட் கார்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். மாருதியின் பிரெஸ்ஸாவும் (Brezza) அளவில் சப்-காம்பேக்ட் பிரிவிலேயே வரும். ஆனால் மேலே குறிப்பிட்ட மற்ற கார்களுக்கு இருக்கும் வரிச்சலுகை பிரெஸ்ஸாவிற்குக் கிடையாது. அது ஏன்?

Maruti Brezza

சப்-காம்பேக்ட் கார்களுக்குக் கிடைக்கும் குறைவான வரிச் சலுகையை பிரெஸ்ஸாவும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் இன்ஜினும் சிறியதாக இருக்க வேண்டும். மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் மற்ற கார் மாடல்களில் 1.2 லிட்டர் அல்லது அதற்கு கீழான அளவிலான பெட்ரோல் இன்ஜின்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன (அல்லது 1.5 லிட்டர் வரையிலான டீசல் இன்ஜினையும் பயன்படுத்திக் கொள்ளலாம்). ஆனால் பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தி வருகிறது மாருதி சுஸூகி.

இதன் காரணமாக சப்-காம்பேக்ட் கார்களுக்கு என விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீதம் வரி இல்லாமல், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ் உள்ளிட்ட சற்று பெரிய மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்கான 40 சதவீதம் வரியே பிரெஸ்ஸாவிற்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இந்த நிலை மாறவுள்ளது. அதன் மூலம் பிரெஸ்ஸாவின் விலையும் குறையலாம் எனத் தெரிகிறது.

Maruti Brezza inside

40 சதவீதம் வரியுடனேயே போட்டி நிறுவனங்களுக்கு இணையாக 8.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி பிரெஸ்ஸா எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது மாருதி. இந்த நேரத்தில் இந்தக் காரின் மீதான வரி 18 சதவீதம் வரை குறைந்தால் இன்னும் குறைவான விலையிலேயே விற்பனை செய்ய முடியும் அல்லவா.

பிரெஸ்ஸாவை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது மாருதி சுஸூகி. தற்போது ஃபிராங்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவியில் மாருதி பயன்படுத்தி வரும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் இந்த ஃபேஸ்லிப்ட் அப்டேட்டுடன் பிரெஸ்ஸாவிற்கும் கொடுக்கப்படவிருக்கிறது. இந்த இன்ஜின் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1.2 லிட்டர் என்ற அளவிற்குள் இருப்பதால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியையே ஈர்க்கும்.

டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஃபிராங்க்ஸ் காரானது 8.92 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரெஸ்ஸாவின் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலும் கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாயை ஒட்டியே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போது இந்திய கார் சந்தையில் மிகவும் குறைவான விலையிலேயே நிறுவனங்கள் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனைத் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

ரெனோ நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கைகர் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கு 7.89 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கும் கீழாக ஸ்கோடா கைலாக்கில் 7.59 லட்சம் என்ற விலையிலேயே டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட் இருக்கிறது.

நெக்ஸான் சப்-காம்பேக்ட் எஸ்யூவியில் 7.37 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கிய டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இதனையெல்லாம் பார்க்கும் போது, போட்டியாளர்களை விட இன்னும் ஒரு படி மேலே சென்று இன்னும் குறைவான விலையில் பிரெஸ்ஸாவின் டர்போ பெட்ரோல் இன்ஜின் காரை மாருதி வெளியிட்டால் சிறப்பாகத் தான் இருக்கும். அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆனால் எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அப்படி அடிமாட்டு விலையில் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொடுக்கும் திறன் கொண்ட ஒரே கார் மாருதி தான். தற்போது பிரெஸ்ஸாவில் அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. மாருதி என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். எனினும் இந்த புதிய விவரங்கள் பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிப்ட் மீதான எதிர்பார்ப்புகளை எகிறச் செய்திருக்கின்றன.

Article Published On: Friday, June 26, 2026, 9:16 [IST]
English summary
Maruti brezza suv facelift may launch at much lower price with turbo engine
மேலும்... #maruti suzuki #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out