ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே கார் தான்! ஆனா ஒன்னு நல்ல விக்குது! ஒன்னு சரியாக விக்கல! தெரியுமா?

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சமீப நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மாருதி நிறுவனத்தின் டிசையர் காரும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காரும் இந்த செக்மென்டை தூக்கி பிடித்து கொண்டு இருக்கின்றன இந்த காரணம் விற்பனை மற்றும் பெரிய அளவில் குறையாமல் இருக்கிறது. இருந்தாலும் மாருதி நிறுவனத்தின் டிசையர் காருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காருக்கும் உள்ள விற்பனை வித்தியாசம் எவ்வளவு இதற்காக இந்த கார்களை மக்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பலர் தங்கள் செடான் காரர்களை விற்பனையிலிருந்து நீக்கி வருகிறார்கள். பல நிறுவனங்கள் பல முக்கியமான செடான் கார்களை விற்பனையில் இருந்து தற்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். அந்த கார்களை தற்போது நீங்கள் நினைத்தாலும் வாங்க முடியாது ஒரு காலத்தில் பிரபலமான கார்கள் கூட தற்போது விற்பனையில் இல்லை. இதற்கு முக்கியமான காரணம் எஸ்யூவி கார்களின் வருகைதான் பல காம்பேக்ட், மிட் சைஸ் என எஸ்யூவி ரக காரர்களை விதவிதமாக வரும் நிலையில் செடான் கார்களை விட எஸ்யூவி கார்கள் அதிக நன்மைகளை தருவதால் மக்கள் எஸ்யூவி கார்கள் பக்கம் நகர்ந்து வருகிறார்கள்.

Maruti Dzire Hyundai Aura Sales Difference

இதனால் இந்தியா முழுவதும் செடான் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்து வந்தாலும் குறிப்பிட்ட சில கார்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தற்போதும் இந்த கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இதில் முக்கியமாக மாருதி நிறுவனத்தின் டிசையர் காரும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காரும் இந்த செக்மெண்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாருதி நிறுவனத்தின் டிசையர் காரை பொருத்தவரை இந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் 19,629 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதே ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா கார் 7978 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் டிசையர் கார் 15,383 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. 5388 கார்கள் தான் விற்பனையாகிறது இந்த இரண்டு கார்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

Maruti Dzire Hyundai Aura Sales Difference

இந்த இரண்டு கார்களிலுமே சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கிறது. கடந்த சில மாத விற்பனை விபரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 20,895 டிசையர் காரும் 4636 ஆரா காரும் விற்பனையாக உள்ளன. இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 16,259 கார்களாக இருந்தது. இதுவே ஆகஸ்ட் மாதம் 16,059 டிசையர் காரும் 5360 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் உள்ள வித்தியாசம் 11,173 காராக இருந்தது.

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2038 டிசையர் காரும் 5387 ஆரா கா5ரும் விற்பனையாகி உள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 14,651யாக இருந்தது. அக்டோபர் மாதம் 20,791 டிசையர் காரும் 5815 ஆரா காரும் விற்பனையாகி உள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 16,259யாக இருக்கிறது.

Maruti Dzire Hyundai Aura Sales Difference

2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 21,082 டிசையர் காரும் 5231 ஆராகாரும் விற்பனையாகி உள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 16,259 கார்களாக உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 19,072 டிசையர் காரும் 4902 இந்த இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் 16,259 ஆகும்.

டிசையர் கார் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனையை பெற்று வருவது நமக்கு கண்கூடாக தெரிகிறது
ஒரு சில மாதங்களில் சற்று ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு கார்களுக்கும் இடையே சுமார் 16000 எண்ணிக்கையில் கார்கள் வித்தியாசம் இருக்கிறது சுமார் 5000 பேர் ஆரா கார் வாங்கினால் 20 ஆயிரம் பேர் டிசையர் காரை வாங்குகிறார்கள். இந்த வித்தியாசம் இந்த இரண்டு கார்களுக்கும் இடையே இருக்கிறது. இதன் மூலம் தெளிவாக டிசையருக்காக தான் அதிக மக்கள் விரும்பும் காராக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சேர்ந்து விட்டாலும் இந்த இரண்டு கார்களை விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. அதன் காரணமாக தான் இந்த இரண்டு கார்களும் தொடர்ந்து நல்ல விற்பனை இழந்து வருகின்றன. இந்த செக்மெண்டில் அடிப்படையில் வளர்ச்சியை பெற்று வரும் காராக இந்த கார்கள் தான் இருக்கிறது. இந்த கார்களில் உங்களுக்கு பிடித்த கார் எது என்ன காரணம் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 5, 2026, 17:20 [IST]
English summary
Maruti dzire hyundai aura sales difference
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X