லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் இந்தக் காரை மட்டும் தான் இப்போ மக்கள் வாங்குறாங்க.. ஏன் தெரியுமா
இந்திய ஆட்டோமொபைல் சந்தை தற்போது பெருமளவில் எஸ்யூவிக்களின் வசமே இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் மற்றும் மிட-சைஸ் எஸ்யூவிக்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிடமும் மேற்கூறிய இரண்டு பிரிவுகளிலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதியிடம் மேற்கூறிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டிரண்டு கார் மாடல்கள் உள்ளன.
எஸ்யூவி கார் மாடல்கள் எந்தளவிற்கு இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்று சொல்வதற்காகவே மேற்கூறிய தகவல்களைக் கூறினேன். நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக ஒரு எஸ்யூவி தானே இருக்க வேண்டும். அது தான் இல்லை. இந்தியாவில் இப்போது அதிகம் விற்பனையாகும் காராக இருப்பது ஒரு செடான் மாடல்.

2010 முதல் 2020 வரை இந்திய ஆட்டோமொபைல் சந்தை செடான்களின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் செடான் கார்களை விரல்விட்டு எண்ணி விடலாம். சப்-காம்பேக்ட் பிரிவில் நான்கு செடான் கார்களும், மிட்-சைஸ் பிரிவில் நான்கு செடான் கார்களுமே விற்பனையில் இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களின் அளவு 35,218 யூனிட்டுகளே. இதில் 23,580 யூனிட்டுகள் மாருதி டிசையர் தான். ஆம், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் மாடல் டிசையர் செடான் தான். இது 4 மீட்டர்கள் நீளத்திற்கும் கீழான சப்-காம்பேக்ட் பிரிவில் வருகிறது.

இரண்டாவதாக அதிகம் விற்பனையான செடான் கார் ஹூண்டாய் ஆரா. இது வெறும் 4,587 யூனிட்டுகளே விற்பனை ஆகியிருக்கிறது. மூன்றாவது இடத்தில் 2,856 யூனிட்டுகள் விற்பனையுடன் ஹோண்டா அமேஸ் இருக்கிறது. இவையெல்லாம் குறைவான அளவுகளாகத் தெரிந்தாலும், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது விற்பனை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இவை அனைத்துமே சப்-காம்பேக்ட் செடான் கார்கள் தான்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 10 செடான் கார்களில் 6 மாருதி டிசையர் மாடல் தான். சப்-காம்பேக்ட் செடான் கார்களை விட, மிட்-சைஸ் செடான் கார்களின் விற்பனை இன்னும் மோமசாக இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ் கார் தான் 1,162 யூனிட்டுகள் விற்பனையுடன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் செடான் காராக இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 865 யூனிட்டுகள் விற்பனையுடன் ஹூண்டாய் வெர்னா மற்றும் 830 யூனிட்டுகள் விற்பனையுடன் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் கொண்டாடப்பட்ட செடான் காராக இருந்த ஹோண்டா சிட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 177 யூனிட்டுகளே விற்பனைய ஆகியிருக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் குறைவாக விற்பனையாக செடான் கார் ஹோண்டா சிட்டி தான்.
இந்த விற்பனை எண்களை வைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்த செடான் பிரிவையும் இப்போது தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பது மாருதி டிசையர் மட்டுமே என்பது தெளிவாகிறது. அதவும் இல்லையென்றால் செடான் கார்களின் விற்பனையில் மண்ணைப் போட்டு மூடியிருப்பார்கள். மிக மிகக் குறைவான விற்பனை காரணமாக செடான்களின் விற்பனையையே கூட சில நிறுவனங்கள் நிறுத்தும் முடிவிற்கு வரவும் வாய்ப்புகள் இருந்திருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் சுழற்சியில் இது எஸ்யூவிக்களுக்கான காலமாக இருக்கிருத. எனவே நிறைய செடான் கார்கள் விற்பனைாகவில்லை. எனினும் மாருதியின் பிராண்டு வேல்யூ மற்றும் வாடிக்கையாளர்களின் மனதை அறிந்து வசதிகளைக் கொடுக்கும் திட்டம் ஆகிய காரணங்களினால் டிசையர் செடானின் விற்பனை உச்சத்தில் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் செடான் கார்களுக்கென ஒரு தனி ஆரா இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மீண்டும் செடான்களின் காலம் வரும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications