450 கிமீ ரேஞ்சு.. அசத்தலான வசதிகள்.. மாருதியின் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கலாமா?

மாருதியின் முதல எலெக்ட்ரிக் காராக இந்தியா முழுவதும் வெளியாகி வரவற்பைப் பெற்று வருகிறது 'e விட்டாரா' (e Vitara). டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என மூன்று வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அடிப்படையான டெல்டா வேரியன்ட் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா? என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது? இதனை வாங்கலாமா? ஆகிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

e விட்டாரா ஒரு மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி. இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறைய நிறுவனங்கள் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காரை இந்தப் பிரிவிலேயே வெளியிட்டுள்ளன. காம்பேக்ட் மற்றும் சிறிய ரக கார்களுக்குப் பெயர் போன மாருதியும் தங்களுடை முதல் எலெக்ட்ரிக் காருக்கு பல்வேறு காரணங்களினால் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவையே தேர்ந்தெடுத்துள்ளது.

Maruti e Vitara

போட்டியாளர்களின் மிட்-சைஸ் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் விலையை ஒட்டியே மாருதி e விட்டாராவின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 15.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எஸ்யூவியின் அடிப்படையான டெல்டா வேரியன்டை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்தக் காருடன் BaaS (Battery as a Service) திட்டத்தையும் மாருதி அளித்திருக்கிறது. இதனால் பேட்டரி இல்லாமல் 10.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை நாம் வாங்கலாம்.

இந்த விலையானது பேட்டரியை உள்ளடக்காதது. பேட்டரிக்கான தொகையை பயன்பாட்டு அடிப்படையில் நாம் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு கிமீ பேட்டரி பயன்பாட்டிற்கும் 3.99 ரூபாய் பயன்பாட்டுக் கட்டணமாக நாம் செலுத்த வேண்டும். இது பேட்டரியை நாம் சொந்தமாக வாங்காததால் அதனை பயன்படுத்துவதற்காக நாம் செலுத்தும் கட்டணமாகும். இதனைத் தவிர்த்து பேட்டரியை வெளியே சார்ஜ் செய்வதால் அதற்கான கட்டணம் அல்லது வீட்டிலேயே சார்ஜ் செய்தால் மின்சாரக் கட்டணம் தனி என்பது குறிப்பிடத்தக்கது.

Maruti e Vitara

பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் அடிப்படை வேரியன்டே அதிகளவு விலையைக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அது நிறைய ப்ரீமியம் வசதிகளையும் கொண்டிருப்பது தான். அந்த வகையில் e விட்டாராவின் அடிப்படையான டெல்டா வேரியன்டிலும் பல்வேறு வகையிலான ப்ரீமியம் வசதிகளை மாருதி கொடுத்துள்ளது. அது என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.

LED DRLகள், ஃபாக் விளக்குகள், 18 இன்ச் அலாய் வீல்கள், இன்டிகேட்டர்களுடன் கூடிய ORVM, இன்டகிரேட்டட் ஸ்பாய்லர், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் ஆகிய வசதிகள் காரின் வெளிப்புறம் வருகின்றன. காரின் உட்புறம், ஸ்லைடிங் மற்றும் ரெக்லைனிங் பின்பக்க சீட்கள், இரண்டு 10 இன்ச் டிஸ்பிளேக்கள், வயர்லெஸ் ஃபோன் மிரரிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்பக்க AC வென்ட்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்ஃபினிட்டி மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரிக்கலாக மடங்கும் வகையிலான ORVM, ஃபேப்ரிக் சீட்கள், ஏர் ப்யூரிஃபையர் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பிற்காக இந்த மாருதி எலெக்ட்ரிக் காரின் அடிப்படை வேரியன்டில் ஏழு ஏர்பேக்குகள், EBD-யுடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், EPB, பிரேக் அசிஸ்ட், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிக் சென்சார்கள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அடிப்படை வேரியன்டில் சிறிய 48.8 kWh பேட்டரி பேக்கையே மாருதி கொடுத்திருக்கிறது. ஒருயொரு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன் இந்த பேட்டரி பேக்கானது 440 கிமீ வரையான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கிறது. e விட்டாராவின் மற்ற இரண்டு வேரியன்ட்களிலும் 543 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் திறன் கொண்ட 61.1 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அடிப்படை வேரியன்டை வாங்கலாமா?

வசதிகள் மற்றும் பவர்ட்ரெயின் அடிப்படையில் சிறப்பான ஒன்றாகவே மாருதி e விட்டாராவின் அடிப்படையான டெல்டா வேரியன்ட் இருக்கிறது. BaaS திட்டத்துடன் வாங்கும் போது தொடக்கச் செலவு குறைவாக இருக்கும் என்பது இந்தக் காரை வாங்குவதற்கான கூடுதல் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. போட்டி நிறுவனங்கள் அத்தனையும் BaaS திட்டத்தைக் கொடுப்பதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, May 12, 2026, 20:26 [IST]
English summary
Maruti e vitara base delta variant features and is it a good option to buy
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+