26 கி.மீ மைலேஜ்! 7 பேர் போகலாம், நம்பர் 1 இடத்தில் விற்பனையாவது இந்த காரா?
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான 7 சீட்டர் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் நீண்ட காலமாக இந்த இடத்தில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. தற்போதும் இதே இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2026ம் ஆண்டு பிறந்த நிலையில் 2025ம் ஆண்டின் கடைசி மாசமான டிசம்பர் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவ.னங்கள் வெளியிட்டு வருகின்றன அதன்படி மாருதி நிறுவனம் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளன.

இதன்படி மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 16,586 கார்கள் விற்பனையாகி இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான டாப் 10ல் நம்பர் 1 7 சீட்டர் காராக இருக்கிறது. இந்த கார் கடந்த 2024 ஆம் ஆண்டு கடந்த விற்பனை ஒப்பிடும்போது மூன்று சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
எனது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 16,056 ஆக விற்பனையாகி இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட கூடுதலாக 500 கார்கள் விற்பனையாகி உள்ளது. மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தாலும் நீண்ட காலமாக இந்த இடத்தை பிடித்து நம்பர் 1 நிலையிலேயே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள போதுமான இடவசதி சொகுசு வசதி முக்கியமாக காரின் விலை தான் குடும்பத்துடன் பயணிக்க குறைந்த விலையில் உள்ள 7 சீட்டர் காராக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வருகிறார்கள்.

இந்த காரில் ஏழு பேர் பயணிக்கலாம். பெரிய பூட் வசதி இருக்கிறது. இதுபோக இந்த காரின் இன்ஜின் நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜினாக இருக்கிறது. இதுபோக குறைவான பராமரிப்பு செலவு இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். மாருதி நிறுவனத்தின் விற்பனை நெட்வொர்க்கும் ஸ்ட்ராங்காக இருப்பதால் இந்த காரின் விற்பனை சிறப்பாக நடக்கிறது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காரை தேடுபவர் தேடுபவர் மக்கள் மத்தியில் இந்த கார் ஒரு முதல் சாய்ஸாக இருக்கிறது.இந்த காரில் ஏழு பேர் பயணிக்கலாம். பெரிய பூட் வசதி இருக்கிறது. இதுபோக இந்த காரின் இன்ஜின் நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜினாக இருக்கிறது. இதுபோக குறைவான பராமரிப்பு செலவு இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். மாருதி நிறுவனத்தின் விற்பனை நெட்வொர்க்கும் ஸ்ட்ராங்காக இருப்பதால் இந்த காரின் விற்பனை சிறப்பாக நடக்கிறது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காரை தேடுபவர் தேடுபவர் மக்கள் மத்தியில் இந்த கார் ஒரு முதல் சாய்ஸாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காருக்கு போட்டியாக பல்வேறு கார்கள் மார்க்கெட்டில் வந்தாலும் விலை மைலேஜ் நம்பகத்தன்மை ஆகிய விஷயங்களில் இந்த கார் சிறப்பாக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் இந்த கார் நம்பர் 1 இடத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 26 கி.மீ வரை மைலேஜ் தருவது இந்த காரின் அதிக விற்பனைக்கு முக்கியமான காரணம்.


Click it and Unblock the Notifications









