515 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் எர்டிகா 7 சீட்டர் காரை விரைவில் களமிறக்குகிறது மாருதி?

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் மின்சார கார் சந்தையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி வருகிறது. ஏற்கனவே இ-விட்டாராவை அறிமுகம் செய்துள்ள நிலையில், நிறுவனத்தின் அடுத்த மின்சார கார் 7 பேர் பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் எம்பிவியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. YMC என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் இந்த காரை வரும் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய YMC எலெக்ட்ரிக் காரில் இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலை மாடலில் 49kWh திறன் கொண்ட LFP பேட்டரி பயன்படுத்தப்படலாம். இதனுடன் 142எச்பி பவரையும், 193 என்எம் டார்க்கையும் வழங்கும் மின் மோட்டார் இடம்பெறும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 415 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்.

Maruti Ertiga

அதிக திறன் கொண்ட மாடலில் 61kWh LFP பேட்டரி இடம்பெறலாம். இதனுடன் சுமார் 172hp மின்மோட்டார் இணைக்கப்படலாம். இந்த மாடல் சுமார் 515 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், YMC காரில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு இருக்கை அமைப்புகள் வழங்கப்படலாம். 6 சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

குடும்பப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு விசாலமான கேபின் அமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல் மற்றும் சில கட்டுப்பாட்டு அமைப்புகள் மாருதி இ-விட்டாரா காரில் இருக்கும் வடிவமைப்பை ஒத்திருக்கலாம்.

Also Read

வசதிகளை பொறுத்தவரை 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 10 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் முன்புற காற்றோட்ட வசதியுடன் கூடிய இருக்கைகள் இடம்பெறலாம். இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு காற்றோட்ட வசதி கிடைக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வடிவமைப்பிலும் YMC வழக்கமான எம்பிவி தோற்றத்தை விட எஸ்யூவி பாணியை அதிகம் கொண்டிருக்கலாம். சோதனை செய்யப்பட்ட கார்களில் இ-விட்டாராவை நினைவுபடுத்தும் முன்புற அமைப்பு, பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் சக்கர வளைவுகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 18 அங்குல ஏரோ வடிவ அலாய் சக்கரங்களும், பின்புறத்தில் எர்டிகாவை நினைவுபடுத்தும் எல் வடிவ டெயில் லேம்ப்களும் இடம்பெறலாம்.

Also Read

பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் தடுப்பு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இடம்பெறலாம். பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுமா என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் குறித்த தகவல் வெளியிடப்பட்டு, அடுத்த ஓரிரு மாதங்களில் அதாவது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாருதியின் தற்போதைய இ-விட்டாரா 49kWh மற்றும் 61kWh பேட்டரி தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. 61kWh பேட்டரியுடன் அதிகபட்சமாக 543 கிமீ ரேஞ்ச் வழங்கும் என மாருதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. YMC-யிலும் இதே பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், நிறுவனத்தின் தற்போதைய மின்சார வாகன கட்டமைப்புடன் இந்த புதிய எம்பிவி நெருக்கமாக தொடர்புடையதாக இருக்கலாம்.

மின்சார கார் மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் கூட விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. இதனை மனதில் வைத்து 7 சீட்டர் எலெக்ட்ரிக் காருக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதை தவறவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த கார மாருதி அடுத்த மாடலாக களமிறக்க உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், கியா கேரன்ஸ் இவி காருக்கும் இது நேரடி போட்டியாக இருக்கும். டாடா மோட்டார்ஸ் கூட சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, September 30, 2026, 12:21 [IST]
English summary
Maruti ertiga ymc electric mpv 7 seater 515km range launch india 2027
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out