மாருதியின் முதல் இவி கார் மார்கெட்டில் ஜெயிக்குமா? இப்படி ஒப்பிட்டு பாருங்க!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவிட்டாரா என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த காரின் விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.இந்த காரை பேட்டரியை அஸ் சர்வீஸ் முறையிலும் வாங்கலாம். முழுமையான காராகவும் வாங்கலாம். இப்படியாக இந்த கார் மார்கெட்டின் போட்டி கார்களின் விலையிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முதன் முறையாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் முதலில் பேட்டரி அஸ் சர்வீஸ் என்ற முறையில் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. தற்போது மாருதி நிறுவனமும் இ-விட்டாரா என்ற இவி காரை விற்பவனைக்கு கொண்டு வந்தது. தற்போது மார்கெட்டில் எம்ஜி விண்ட்ஸர் இவி, எம்ஜி இசட்எஸ் இவி ஆகிய கார்கள் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் விற்பனையாகி வருகிறது.

Maruti E Vitara Price Comparison

இதில் இவிட்டாரா கார் ரூ10.99 லட்சம் முதல் ரூ14.51 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பேட்டரிக்கு கி.மீக்கு ரூ3.99 முதல் ரூ4.39 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த காரை முழுமையாக சொந்தமாக்கினால் ரூ15.99 லட்சம் முதல் ரூ20.01 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 49 மற்றும் 61 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. இந்த கார் 440-543 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது.

எம்ஜி விண்ட்ஸர் இவி கார் ரூ9.99 லட்சம் முதல் ரூ13.39 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பேட்டரிக்கு கி.மீக்கு ரூ3.9 முதல் ரூ4.5 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த காரை முழுமையாக சொந்தமாக்கினால் ரூ14 லட்சம் முதல் ரூ18.5 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 38மற்றும் 52.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. இந்த கார் 332-449 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது.

எம்ஜி இசட்எஸ் இவி கார் ரூ13 லட்சம் முதல் ரூ15.51லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பேட்டரிக்கு கி.மீக்கு ரூ4.5 வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த காரை முழுமையாக சொந்தமாக்கினால் ரூ17.99 லட்சம் முதல் ரூ20.75 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 50.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. இந்த கார் 461 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது.

மஹிந்திரா பிஇ6 கார் இந்தியாவில் முழுமையாக சொந்தமாக்கும் கார் போன்ற வடிவமைப்பிலேயே உள்ளது. இந்த கார் ரூ18.9 லட்சம் முதல் ரூ27.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் 59 மற்றும் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த காரில் முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 557-683 கி.மீ வரை பயணிக்க முடியும்.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முழுமையாக சொந்தமாக்கும் கார் போன்ற அமைப்பிலேயே விற்பனையாகிறது. இந்த கார் ரூ17.99 லட்சம் முதல் ரூ24.7 லட்சம் வரையிலான விலையில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் 42மற்றும் 51.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த காரில் முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 420-510 கி.மீ வரை பயணிக்க முடியும்.

டாடா கர்வ் கார் இந்தியாவில் முழுமையாக சொந்தமாக்கும் கார் போன்ற அமைப்பிலேயே விற்பனையாகிறது. இந்த கார் ரூ17.49 லட்சம் முதல் ரூ22.24 லட்சம் வரையிலான விலையில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் 45 மற்றும் 55 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த காரில் முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 430-585 கி.மீ வரை பயணிக்க முடியும்.

விண்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முழுமையாக சொந்தமாக்கும் கார் போன்ற அமைப்பிலேயே விற்பனையாகிறது. இந்த கார் ரூ17.29 லட்சம் முதல் ரூ19.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் 59.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த காரில் முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 468 கி.மீ வரை பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரி அஸ் எ சர்வீஸ் முறையில் வாங்கினால் கார் விலையில் பார்த்தால் விண்ட்ஸர் இவி கார் குறைந்த விலையில் இருக்கிறது. அதற்கான பேட்டரியை வாடகையும் கிட்டத்தட்டகுறைவாக தான் உள்ளது. இவிட்டாரா காரின் விலை ரூ1 லட்சம் அதிகமாக உள்ளது. முழுமையாக வாங்கும் போது விண்ட்ஸர் இவி கார் ரூ14 லட்சம் என்ற விலையிலும் விண்ட்ஸர் இவி கார் ரூ16 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 19, 2026, 16:55 [IST]
English summary
Maruti evitara vs windsor creta be6 curvv price comparison
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+