வெறும் 4 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும் மாருதி எலெக்ட்ரிக் கார்.. அது என்ன கார்னு தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலான டியாகோ EV-யை அப்டேட் செய்தது டாடா மோட்டார்ஸ். முன்பை விட மிகவும் குறைவான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை டாடா வெளியிட்டது. அதுமட்டுமின்றி BaaS திட்டத்துடன் வெறும் 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை வாங்கவும் வழி வகை செய்திருக்கிறது.

இந்தக் குறைவான விலையுடன் எம்ஜி காமெட் EV-யை விட விலை குறைவான எலெக்ட்ரிக் காராக மாறியிருக்கிறது டாடா டியாகோ EV. எம்ஜி காமெட் EV-யை BaaS திட்டத்தின் கீழ் 4.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக இவ்வளவு குறைவான விலையில் ஒரு நிறுவனம் புதிதாக ஒரு எலெக்ட்ரிக் காரை வெளியிட வேண்டும் என்றால் அது மாருதியால் மட்டுமே முடியும்.

Maruti EWX

இந்தியாவில் பட்ஜெட் கார்களுக்கு என்றே பெயர் போன ஒரு நிறுவனம் மாருதி. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் தங்களுடைய முதல் காராக e விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவியை வெளியிட்டது. பிராண்டின் மதிப்பை உயர்த்துவதற்காக முதலில் ப்ரீமியமான ஒரு எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்தியாவில் மட்டுமின்றி இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளிநாடுகளுக்கும் அந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்து மூன்று வரிசை சீட்கள் கொண்ட புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு விலை குறைவான பட்ஜெட் ஹேட்ச்பேக் ஒன்றை மாருதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி மீது வாடிக்கையாளர்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று குறைவான விலையிலேயே போதுமான வசதிகள் கொண்ட காரை விற்பனை செய்வது.

Maruti EWX

எஸ்-பிரஸ்ஸோ, ஆல்டோ, வேகன் ஆர், செலரியோ, டிசையர், ஸ்விஃப்ட்.. இவை தான் மாருதியின் முகங்கள். முதல் முறை கார் வாடிக்கையாளர்களுக்காகவே இந்தக் கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. பைக்கில் இருந்து காருக்கு மாற விரும்புபவர்கள் 2020க்கு முன்பு வரை ஆல்டோவையே முதன்மையாகத் தேர்வு செய்து வந்தார்கள். நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறும் நிறைய பேருக்கு வாசற் கதவு மாருதி தான்.

அதே மரபை எலெக்ட்ரிக் கார்களிலும் மாருதி பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேலே கூறிய டாடா மற்றும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக மிகவும் குறைவான விலை கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை மாருதியிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். இதனைப் பற்றிப் பேசும் போது தான் அதே போன்ற ஒரு எலெக்ட்ரிக் காரை சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வருகிறது.

EWX என்ற பெயரில் எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் ஒன்றை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தியது அந்நிறுவனம். 3.4 மீட்டர் நீளத்தில் காமெட் EV மற்றும் டியாகோ EV-க்கு இடைப்பட்ட அளவில் இருந்தது EWX. இந்த எலெக்ட்ரிக் காரின் டிசைனை இந்தியாவிலும் 2024ல் காப்புரிமைக்குப் பதிவு செய்தது மாருதி. எனவே இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

கான்செப்ட் கார் என்பதால் இந்த EWX குறித்த அதிக தகவல்களை மாருதி பகிர்ந்து கொள்ளவில்லை. மேலே கூறிய கார்களைப் போலவே EWX-ம் நகரப் பயன்பாட்டை பிரதானமாகக் கொண்ட எலெக்ட்ரிக் காராகவே மாருதியால் உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனவே அதற்கேற்ற வகையில் 230 கிமீ ரேஞ்சையே இந்தக் கார் கொண்டிருப்பதாக அப்போது அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்தியாவில் சூடுபிடித்து வரும் நிலையில் நாம் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே இந்த குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை மாருதி இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2026ம் ஆண்டிற்குள்ளேயே கூட இந்த EWX எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் தயாரிப்பு நிலை மாடலின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தங்களது முதல் எலெக்ட்ரிக் காரான e விட்டாராவுக்கே BaaS திட்டத்தை மாருதி வழங்கியிருந்தது. BaaS திட்டத்தின் கீழ் 10.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி மாருதி e விட்டாராவை நாம் வாங்க முடியும். அதனை வைத்துப் பார்க்கும் போது BaaS திட்டத்துடன் 4 லட்சம் ரூபாய் விலையில் கூடி புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை மாருதியால் வெளியிட முடியும். EWX என்பது சிறிய ரக எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது எலெக்ட்ரிக் கார் பிரிவில் போட்டி பெருகிக் கொண்டே வரும் நிலையில், விரைவாகவே வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய வகையிலான எலெக்ட்ரிக் கார்களை மாருதி விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களை. இன்னும் முழுமூச்சாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மாருதி இறங்கவில்லை. அப்படி இறங்கும் போது நாம் எதிர்பார்க்கும் வகையிலான காரின் வெளியீட்டை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

Article Published On: Saturday, May 30, 2026, 16:48 [IST]
English summary
Maruti ewx production spec may launch as low cost electric car in india
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out