இந்த மாருதி காருக்குத் தான் இப்போ மவுசு அதிகமாக இருக்கும்.. போட்டி போட்டு மக்கள் வாங்கிட்டு இருக்காங்க

மாருதியின் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான ஃபிராங்க்ஸ் மற்றுமொரு புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எட்டிய முதல் நெக்ஸா எஸ்யூவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மாருதி ஃபிராங்க்ஸ். 2023ல் வெளியிடப்பட்ட ஃபிராங்க்ஸ், மூன்றே ஆண்டுகளில் இந்த விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஃபிராங்க்ஸ், அப்போது இருந்தே மாருதிக்கு சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 பட்டியலில் ஃபிராங்க்ஸ் கண்டிப்பாக இடம்பெற்றுவிடும். போட்டிய நிறைந்த சப்-காம்பேக்ட் பிரிவில் விற்பனை செய்யப்படாலும், மற்ற கார்களை விட ஃபிராங்க்ஸ் அதிகமாகவே விற்பனையாகி வருகிறது.

Maruti Fronx

முதல் ஒரு லட்சம் யூனிட்டுகள் விற்பனையாவதற்கு 10 மாதங்கள் எடுத்துக் கொண்ட ஃபிராங்க்ஸ், கடைசி 1 லட்சம் யூனிட்டுகள் விற்பனைக்கு அதில் பாதியளவு, அதாவது ஐந்து மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், வருடங்கள் ஆக ஆக வாடிக்கையாளர்களிடம் ஃபிராங்ஸுக்கு வரவேற்பு கூடி வருவதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் ஃபிராங்க்ஸின் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்து வந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. 2024ம் நிதியாண்டின் முடிவில் 1.34 லட்சம் யூனிட்டுகள் விற்பனையான நிலையில், 2025ம் நிதியாண்டில் அது 1.66 லட்சம் யூனிட்டுகளாக உயர்ந்தது. கடந்த 2026ம் நிதியாண்டில் தான் அதிகபட்சமாக 1.72 லட்சம் ஃபிராங்க்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மாருதி சுஸூகி.

Maruti Fronx

நடப்பு நிதியாண்டில் முதலிரண்டு மாதங்களில் மட்டும், அதாவது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 39,515 ஃபிராங்க்ஸ் எஸ்யூவிக்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது இது 48 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்த இரண்டு மாதங்களில் மாருதி விற்பனை செய்த மொத்த எஸ்யூவிக்கள் மற்றும் எம்பிவிக்களின் அளவில் இது 25 சதவீதமாகும். அதாவது மாருதி விற்பனை செய்யும் நான்கு எஸ்யூவி அல்லது எம்பிவி கார்களில் ஒன்று ஃபிராங்க்ஸாக தற்போது இருக்கிறது.

மாருதியின் மற்ற நெக்ஸா எஸ்யூவிக்கள் அல்லது எம்பிவிக்களுடன் ஒப்பிடும் போது ஃபிராங்க்ஸே அதிகம் விற்பனையாகி வருகிறது. ஃபிராங்க்ஸுக்குக் கீழேயே, கிராண்டு விட்டாரா, XL6, S-கிராஸ் (தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது), ஜிம்னி, இன்விக்டோ மற்றும் e விட்டாரா ஆகிய மற்ற நெக்ஸா கார் மாடல்கள் உள்ளன.

கடந்த மே மாதத்தை ஃபிராங்க்ஸ் எஸ்யூவிக்கு மற்றொரு சிறப்பான மாதமாகக் கூறலாம். கடந்தாண்டு பிப்ரவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு அடுத்தபடியாக, கடந்த மே மாதம் தான் ஒரே மாதத்தில் 20,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை மூன்றாவது முறையாகக் கடந்திருக்கிறது ஃபிராங்க்ஸ். இது இந்தக் காரை இப்போதும் வாடிக்கையாளர்கள் எந்தளவிற்கு விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

நல்ல மைலேஜ், ஸ்டைலான டிசைன், எஸ்யூவிக்கான தோற்றம், ஸ்போர்ட்டியான மற்றும் பவர்ஃபுல்லான இன்ஜின், ஃபன் டூ டிரைவ் நேச்சர் ஆகியவற்றை இந்த ஃபிராங்க்ஸ் எஸ்யூவியின் அதிக விற்பனை அளவிற்கான முக்கியமான காரணங்களின் ஒன்றாகக் கூறலாம். வரும் மாதங்களில் ஃபிராங்க்ஸின் விற்பனை அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது. முதல் முறையாக நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி எட்டுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறிய சிறப்பம்சங்களுடன், மிகவும் குறைவான விலையில் இந்தக் காரை விற்பனை செய்து வருவது நிறைய வாடிக்கையாளர்கள் இதனை விரும்புவதற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தக் காரை 6.85 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது மாருதி. இந்தக் காரை வேண்டாம் என்று சொல்வதற்கு பெரிதாக எந்தக் காரணமும் கிடையாது. குறிப்பாக போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது.

Article Published On: Monday, June 8, 2026, 15:11 [IST]
English summary
Maruti fronx reached 5 lakhs sales milestone reached last one lakh in just 5 months
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out