1 லட்சம் ரூபாய் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் மாருதி எஸ்யூவி

இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வரும் ப்ரீமியமான 5 சீட்டர் எஸ்யூவிக்களில் ஒன்று கிராண்டு விட்டாரா. இந்தக் காருக்கு ஜூலை மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 5 சீட்டர் எஸ்யூவி காரை 95,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் நாம் வாங்க முடியும். அது எப்படி என்பதை இங்கே நாம் பாரக்கலாம்.

கிராண்டு விட்டாரா எஸ்யூவியை மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன், பல்வேறு வேரியன்ட்களாக மாருதி விற்பனை செய்து வருகிறது. தற்போது 10.77 லட்சம் ரூபாய் முதல் 19.72 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த மாருதி எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது வருகிறது.

Maruti Grand Vitara

பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் CNG என மூன்று பவர்ட்ரெயின் தேர்வுகளை இந்தக் கார் கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல் இன்ஜின் கொண்டே வேரியன்ட்களுக்கே அதிக மதிப்பிலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தொடக்கநிலை வேரியன்டிற்கே கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிராண்டு விட்டாராவின் சிக்மா பெட்ரோல் வேரியன்டையே 95,000 ரூபாய் வரையிலான சலுகைகளுடன் நாம் வாங்க முடியும். இந்த வேரியன்டே 10.77 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது.

அடுத்ததாக டெல்டா பெட்ரோல் வேரியன்டுக்கு 85,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. கிராண்டு விட்டாரா எஸ்யூவியின் உயர்நிலை ஸெட்டா மற்றும் ஆல்ஃபா பெட்ரோல் வேரியன்ட்களுக்கு 25,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகளுடன், ஐந்து ஆண்டுகள் வரையிலான கூடுதல் வாரண்டியும் சலுகையாக இந்த மாதம் வழங்கப்படுகிறது.

Maruti Grand Vitara

கிராண்டு விட்டாராவின் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட வேரியன்ட்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலான கூடுதல் வாரண்டி, 50,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்சு போனஸ், 30,000 ரூபாய் வரையிலான அப்கிரேடு போனஸ் மற்றும் 10,000 ரூபாய் வரையிலான கார்ப்பரேட் போனஸ் ஆகிய சலுகைகளை மாருதி வழங்குகிறது.

கிராண்டு விட்டாரா CNG வேரியன்ட்களுக்கு 90,000 ரூபாய் வரையிலான சலுகைகளை மாருதி வழங்குகிறது. ஆனால் விக்டோரிஸின் CNG வேரியன்ட்களைப் போல கிராண்டு விட்டாராவில் அண்டர்பாடி CNG டேங்க் வசதி கிடையாது. மாறாக, பூட் ஸ்பேஸிலேயே CNG டேங்க் வைக்கப்பட்டிருக்கும். இது லக்கேஜ் ஸ்பேஸை பாதிக்கும். எனவே கிராண்டு விட்டாரா CNG வெர்ஷனை வாங்கும் போது இதனையும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தாண்டு தொடக்கத்தில் 15,000 யூனிட்டுகளுக்கும் மேலான விற்பனையுடன் வெற்றிகரமாக பயணத்தைத் தொடங்கியது கிராண்டு விட்டாரா. ஆனால் இப்போது விக்டோரிஸ் மற்றும் கியா செல்டோஸுக்குக் கீழாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நான்காம் இடத்தில் உள்ளது. எனவே கிராண்டு விட்டாராவின் விற்பனையை உயர்த்தும் பொருட்டு அதிகளவிலான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.

இந்தியாவில் மிகவும் போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி விக்டோரிஸ், கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டாவுடன், டாடா சியரா, ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், எம்ஜி அஸ்டர், டாடா கர்வ் ஆகிய எஸ்யூவிக்களும் கிராண்டு விட்டாராவிற்குப் போட்டியாகக் களத்தில் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கிராண்டு விட்டாராவை வாங்கத் திட்டமிட்டிருந்தீர்கள் என்றால், அதனை வாங்குவதற்கு இது தான் சரியான நேரம். இந்த சலுகைகளுடன் நீங்கள் எதிர்பார்ப்பதை விட குறைவான விலையிலேயே இந்த மிட்-சைஸ் எஸ்யூவி வாங்க முடியும். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் சிறப்பான, மேம்பட்ட வசதிகள் கொண்ட எஸ்யூவிக்களில் ஒன்றாக இந்த மாருதி கிராண்டு விட்டாரா இருந்து வருகிறது. நிச்சயமாக நாம் கொடுக்கும் பணத்திற்கேற்ற கார் தான்.

Article Published On: Thursday, July 9, 2026, 11:26 [IST]
English summary
Maruti grand vitara mid size suv offers this july in india
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out