3 லட்சம் ரூபாய் தள்ளுபடியுடன் மாருதி கார் விற்பனை.. மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!
வாடிக்கையாளர்கள் கார்களை வாங்குவதை எளிமையாக்கும் விதமான ஒவ்வொரு மாதமும் கார்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மே மாதம் மாருதியின் கார்கள் பலவும் சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி அதிகபட்ச சலுகையுடன் விற்பனை செய்யப்ட்டு வரும் மாருதி கார் குறித்தே இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த மே மாதம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் இன்விக்டோ (Invicto) எம்பிவி (MPV) கார் மாடலுக்குத் தான் அதிகபட்ச சலுகையை மாருதி வழங்கியிருக்கிறது. இந்த 7/8 சீட்டர் கார் மாடலை 2.80 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளுடன் இந்த மே மாதம் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

50,000 ரூபாய் வரையிலான கன்ஸ்யூமர் ஆஃபர், 1 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்சு போனஸ், 1.15 லட்சம் ரூபாய் வரையிலான ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் 15,000 ரூபாய் வரையிலான கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகிய சலுகைகள் இன்விக்டோ எம்பிவி மாடலுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 2.80 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இது மாருதியின் சொந்த கார் மாடல் கிடையாது. டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸையே ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக மாருதி விற்பனை செய்து வருகிறது. மாருதியின் குறைவான விலை கொண்ட நான்க கார் மாடல்களை டொயோட்டா ரீபேட்ஜ் செய்தும் இந்தியாவில் விற்பனை செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

மூன்று வேரியன்ட்களாக இந்த இன்விக்டோ எம்பிவி மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸெட்டா பிளஸ் 7 சீட்டர், ஸெட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் ஆகிய மூன்று வேரியன்ட்களில் இருந்து ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். மூன்று வேரியன்ட்களிலுமே பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயினே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எம்பிவி காரினை ஸ்டாண்டர்டாக 24.97 லட்சம் ரூபாய் முதல் 28.60 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறத. மேற்கூறிய சலுகைகளுடன் 2 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் இந்தக் காரினை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
டொயோட்டா இன்னோவா நன்றாக இருக்கிறது, ஆனால் மாருதியின் பிராண்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் இன்விக்டோவைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும் மாருதியின் சர்வீஸ் செண்டர்கள் மூலம் பயன்பெற முடியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா எம்பிவியையே இரண்டு மாடல்களாக விற்பனை செய்து வருகிறது. ஒன்று இன்னோவா ஹைகிராஸ், மற்றொன்று இன்னோவா கிரிஸ்டா. இதில் இன்விக்டோ மாடலானது இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வடிவம் தான். இந்த ஹைகிராஸ் தனிநபர் பயன்பாட்டை மையப்படுத்தி பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரு எம்பிவி கார் மாடலாகும்.
இன்னோவா கிரிஸ்டாவானது வணிகப் பயன்பாடு, டேக்ஸி பயன்பாட்டை மனதில் கொண்டு ஹைகிராஸை விட ப்ரீமியமான வசதிகள் குறைவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு எம்பிவி கார் மாடல் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். அதேபோல் ஹைகிராஸ்/ இன்விக்டோவில் பெட்ரோல் இன்ஜினுடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயினும், கிரிஸ்டாவில் டீசல் இன்ஜின் கொண்ட பவர்ட்ரெயினும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியின் இன்விக்டோவை இப்போது கூடுதல் சலுகைகளுடன் வாங்க முடிவது சிறப்பான விஷயம் தான். மேலே கூறியிருப்பது போல மாருதியின் சர்வீஸ் செண்டர்களால் நாம் பயனடையலாம் என்பது பிளஸ் பாயிண்ட் என்றால், தேர்ந்தெடுப்பதற்கு குறைவான வேரியன்ட்களே இருப்பது மைனஸ் பாயிண்ட். இன்னோவா என்றால் இன்னும் குறைவான விலையில் இருக்கும் வேரியன்ட்கள் மற்றும் முழுவதுமாக பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்டை கூட வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications