மாருதியின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி.. மஹிந்திரா, டாடாலாம் இனி அவ்வளவு தான்
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி சுஸூகி தான். மற்ற நிறுவனங்கள் விற்பனை செய்வதை வில இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கார்களை ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸூகி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்டரிக் கார்கள் விற்பனையில் இதுவரை மாருதி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் சந்தை தற்போது மிகவும் சிறியதாகவே இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூட 10,000 யூனிட்டுகளும் கீழான அளவிலேயே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை மாருதி விற்பனைக்குக் கொண்டு வந்தது.

பிப்ரவரி மாதம் இந்த e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதம் 2,254 e விட்டாரா கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த அளவுடன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி e விட்டாரா. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் என்றால் அது எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV தான். அதுவே மார்ச் மாதம் 4,530 யூனிட்டுகளே விற்பனையாகியுள்ளது.
ஒரு காரை வைத்து சந்தையைக் கட்டுப்படுத்த முடியாது என்பது மாருதிக்கு தெரியாதா என்ன. எனவே தான் மற்றொரு புதிய எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்தப் புதிய காரை இந்திய சாலைகளில் இப்போது சோதனை செய்யும் செய்து வருகிறது மாருதி. அப்படி சோதனை செய்யப்பட்டபோது ஸ்பை ஷாட்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பை புகைப்படங்கள் மூலம் மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த சில தகவல்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன.

YMC என்ற குறியீட்டுப் பெயரால் இந்த எலெக்ட்ரிக் காரை அழைத்து வருகிறது மாருதி. 7 சீட்டர் காராக உருவாக்கப்பட்டு வரும் இதனை, 5 சீட்டர் வடிவிலும் அந்நிறுவனம் வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஸ்லோப்பான ரூஃப்-லைனுடன் தற்போது விற்பனையில் இருக்கும் e விட்டாராவை விட சற்று நீளமான காராகவே இந்த YMC இருக்கிறது.
e விட்டாராவுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹார்டெக்ட்-e/27PL பிளாட்ஃபார்மிலேயே புதிய YMC எலெக்ட்ரிக் காரையும் மாருதி உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. e விட்டாரா எலெக்ட்ரிக் காரில் இருக்கும் பல்வேறு டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகளை இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரிலும் நாம் பார்க்கலாம் எனத் தெரிகிறது. அத்துடன் விக்டோரிஸ் எரிபொருள் எஸ்யூவின் டிசைன் அம்சங்களையும் புதிய YMC எலெக்ட்ரிக் காரில் மாருதி பயன்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.
இந்தியாவில் தற்போது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் பிரிவில் பெரியளவில் போட்டியில்லாமல் இருந்து வருகிறது. இந்தப் பிரிவில் மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி கடந்தாண்டு வெளியானது. விரைவில் டாடாவும் சஃபாரி EV-யை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. எனவே மாருதியும் இந்தப் பிரிவில் வேகமாக தனியொரு இடத்தைப் பிடித்த முந்துவதாகத் தெரிகிறது. விரைவிலேயே இந்தப் புதிய மாருதி எலெக்ட்ரிக் காரின் வெளியீடு இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியின் வரவு இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் வாகன சந்தைக்குள் அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. e விட்டாரா நல்ல விற்பனை அளவுகளைக் கொண்டிருக்கிறது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு நிறைய தேர்வுகள் கிடைக்கும் போதே விற்பனை அளவு அதிகரிக்கும். தற்போது அதனை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.


Click it and Unblock the Notifications