போன வருஷம் வெறும் 8 பேர் வாங்குன காரை இந்த வருஷம் இத்தனை ஆயிரம் பேர் வாங்கிட்டாங்களா?
மாருதி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ என்ற காரை கடந்தாண்டு வெறும் 8 பேர் தான் வாங்கிய நிலையில் தற்போது 42350 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வளவு அதிக விற்பவனை நடந்தததற்கு என்ன காரணம்? இந்த ஒராண்டில் என்ன அதிசயம் நடந்தது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்வதில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் குறைந்த விலை காராக இருக்கிறது. இதன் காரணமாக பலர் இந்த காரை வாங்கி வந்தனர். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு இந்த காரின் விற்பனை குறைந்தது.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எஸ்-பிரஸ்ஸோ என்ற காரை வெறும் 8 பேர் தான் வாங்கியிருந்தனர். இந்த கார் விற்பனையிலிருந்தே நிறுத்தப்படும் என பேசப்பட்டது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது ஏதோ பெரிய அதிசயம் நடந்துவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது. இந்த கார் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 3396 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி 2.0 தான் இந்த காரின் விலை ஜிஎஸ்டி மாற்றத்தில் கணிசமாக குறைந்தது. தற்போது இந்த கார் ரூ3.49 லட்சம் முதல் ரூ5.24 லட்சம் வரையிலான விலையில் விற்பனவையாகி வருகிறுது. அதிகபட்சமாக எல்எக்ஸ்ஐ (ஓ) வேரியன்ட் ரூ 1,19,600 வரை விலை குறைந்துள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஎஸ் பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் 56.69 பிஎஸ் பவரையும், 82.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த காரின் மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் மேனுவலில் 24 கி.மீ மைலேஜூம், பெட்ரோல் ஆட்டோமெட்டிக்கில் 24.76 கி.மீ மைலேஜூம், சிஎன்ஜியில் 32.73 கி.மீ மைலேஜூம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்க பவர் விண்டோ கீலெஸ் எண்ட்ரி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓ ஆர்விஎம், கேபின் ஏர் ஃபில்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் விலை குறைவாக இருந்தாலும் சிறப்பான அம்சங்கள் உள்ளன. இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் வாகனங்களை விற்பனை செய்தாலும் ஒரு கட்டத்தில் விற்பனை குறைந்தவாகனத்தின் விற்பனையை மீண்டும் மீட்டு கொண்டு வருவது சாதனை தான்! அதை இந்நிறுவனம் சிறப்பாக செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









