வெறும் ரூ.3 லட்சத்திற்கு இந்தப் புத்தம் புது காரை வீட்டுக்கு வாங்கிட்டு வரலாம்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார் மாடல்களுக்கு மாருதி சுஸூகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சலுகைகள் அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த மாதமும் பல்வேறு கார் மாடல்களுக்கும் அந்நிறுவனம் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் குறைவான விலை கொண்ட சிறிய ரக கார் மாடலான எஸ்-பிரஸ்ஸோவுக்கு எவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன, என்ன அம்சங்களுடன் அந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாலுக்கு இந்த ஏப்ரல் மாதம் ரூ.37,500 வரையிலான சலுகைகளை வழங்கி வருகிறது மாருதி. இதில் ரூ.10,000 வரையிலான பயனாளர் சலுகையும், ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்சு போனஸ் அல்லது ரூ.25,000 வரையிலான ஸ்கிராப்பேஜ் போனஸும் அடங்கும். இத்துடன் ரூ.2,500 வரையிலான கார்ப்பரேட் சலுகையையும் இந்தக் காருக்கு வழங்குகிறது மாருத. இந்த சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்படுவதை விட மிகவும் குறைவான விலையிலேயே இந்த மாடலை நாம் வாங்க முடியும்.

Maruti S-Presso

இந்தியாவிலேயே மிகவும் குறைவான விலை கொண்ட கார் மாடல் என்றால் அது இந்த எஸ்-பிரஸ்ஸோ தான். இதனை ரூ.3.50 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. முதலில் இந்தப் பட்டத்தை ஆல்டோ K10 கார் மாடல் தான் கொண்டிருந்தது. கடந்தாண்டு ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்யப்பட்ட போது எஸ்-பிரஸ்ஸோ முந்திக் கொண்டது.

ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்படும் சலுகைகளுடன் ரூ.3.50 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்தக் காரை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த சலுகைகளானது இந்த ஏப்ரல் மாதம் முடியும் வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மாருதியின் ஆல்டோ-K10 மற்றும் ரெனோ க்விட் ஆகிய கார் மாடல்களுக்குப் போட்டியாக இந்த எஸ்-பிரஸ்ஸோ சிறிய ரக தொடக்கநிலை ஹேட்ச்பேக் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Maruti S-Presso Hatchback

இந்த எஸ்-பிரஸ்ஸோ மாடலை STD (O), LXi (O), VXi (O), VXi (O)+ என நான்கு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி. நான்கு வேரியன்ட்களிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. டாப் எண்டான VXi (O) மற்றும் VXi (O)+ ஆகிய வேரியன்ட்களுடன் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும் நாம் பெற முடியும்.

பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு வகையான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் இந்த சிறிய ரக ஹேட்ச்பேக் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. LXi (O) மற்றும் VXi (O) ஆகிய இரண்டு வேரியன்ட்களாக CNG பவர்ட்ரெயின் கொண்ட எஸ்-பிரஸ்ஸோ மாடலை நாம் வாங்கலாம். CNG பவர்ட்ரெயினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. CNG வேரியன்டானது ரூ.4.62 லட்சம் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

ஹேட்ச்பேக் கார் தான் என்றாலும் பார்ப்பதற்கு சிறிய ரக எஸ்யூவிக்கான லுக்கை இந்த எஸ்-பிரஸ்ஸோ கொண்டிருக்கும். மிகவும் விலை குறைவான அடிப்படையான கார் என்பதால், போதுமான வசதிகளை இந்தக் கார் கொண்டிருக்கிறது. பெர்ஃபாமன்ஸும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய வகையிலேயே இருக்கும். ஒரேயொரு குறை இந்தக் காரில் 6 ஏர்பேக்குகளை மாருதி ஸ்டாண்டர்டாகக் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகளை அந்நிறுவனம் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது. விரைவில் இந்தக் காரிலும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருசக்கர வாகனங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற விரும்புபவர்களுக்கான சிறப்பான தேர்வாக இந்த எஸ்-பிரஸ்ஸோ இருக்கும். முதல் முறை கார் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ-K10 ஆகிய கார் மாடல்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது மாருதி. மேலே கூறியது போல சலுகைகளுடன் வழக்கமான விலையை விடக் குறைவான விலையிலேயே புதிய காரை வீட்டிற்கு ஓட்டி வரலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 19:39 [IST]
English summary
Maruti s presso offers this april 2026 can buy the car at much lower price
மேலும்... #maruti suzuki #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+