23 லட்சம் வீடுகளை அலங்கரித்த மாருதி! இப்படி ஒரு நம்பிக்கை வேற யாராலயும் பெற முடியாது!
2025ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகன விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த டிசம்பர் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் இந்த விற்பனை விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
மாருதி நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 1,78,646 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1,30,117 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 48,529 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு 37.30 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,70,971 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாதம் 7675 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 4.49 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை பொருத்தவரை உள்நாட்டில் 1,78,646 வாகனங்களும், ஏற்றுமதியில் 25,739 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது, டொயோட்டா பிராண்டில் 9950 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இலகு ரக வாகனங்களை பொருத்தவரை 3519 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் 2,17854 வாகனங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் மினி செக்மெண்டில் இந்நிறுவனம் ஆல்டோ மறஅறம் எக்ஸ்பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. அதில் 14225 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. காம்பேக்ட் செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. அதில் 78704 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
மிட் சைஸ் செக்மெண்டில் சியாஸ் என்ற செடான் கார் விற்பனையில் இருந்தாலும் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. யூட்டிலிட்டி வாகனங்களில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ், எக்ஸ்எல் 6 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த செக்மெண்டில் 73,818 கார்கள்வறி்பனவையாகியுள்ளது. வேன் செக்மெண்டில் ஈக்கோ மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதில் 11899 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 19,55,491 வாகனங்களை உள் நாட்டில் விற்பனை செய்துள்ளது. 3,95,648 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. மொத்தம் 23,51,139 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவரை நடந்த விற்பனையிலேயே 2025ம் ஆண்டு நடந்த விற்பனவை தான் அதிகபட்ச விற்பனையாகும்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை பொருத்தவரை உள்நாட்டில் 1,78,646 வாகனங்களும், ஏற்றுமதியில் 25,739 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது, டொயோட்டா பிராண்டில் 9950 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இலகு ரக வாகனங்களை பொருத்தவரை 3519 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் 2,17854 வாகனங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

மிட் சைஸ் செக்மெண்டில் சியாஸ் என்ற செடான் கார் விற்பனையில் இருந்தாலும் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. யூட்டிலிட்டி வாகனங்களில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ், எக்ஸ்எல் 6 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த செக்மெண்டில் 73,818 கார்கள்வறி்பனவையாகியுள்ளது. வேன் செக்மெண்டில் ஈக்கோ மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதில் 11899 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்திற்கு சிறப்பான வளர்ச்சியை பெற்றுவருகிறது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிறுவனம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Click it and Unblock the Notifications