9 மாசத்துல 17 லட்சம் பேர் கண்ணை மூடிட்டு இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! வரலாற்றிலேயே இதான் முதன் முறை!
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிகமான வாகனங்களை தற்போதே விற்பனை செய்து இமாலய சாதனையை படைத்துள்ளது. இந்தாண்டு அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி தரும் ஆண்டாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தான் இந்தியாவில் ்திக அளவில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. நடப்பு நிதியாண்டான 2025-26ம் நிதியாண்டில் மொத்தம் 9 மாதங்கள் தான் இதுவரை முடிந்துள்ளது. கடைசி காலாண்டு தற்போது நடப்பில் உள்ளது.

இந்த நிதியாண்டில் முதல் 9 மாதத்திலேயே இந்நிறுவனம் மொத்தம் 17,46,504 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 16,29,631 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் கடந்தாண்டை விட அதிகமானது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதில் உள்நாட்டு விற்பனை மட்டும் 14,35,945 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 3,10,559 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஏற்றுமதியும் சிறப்பாக இருந்துள்ளது. முக்கியமாக பலேனோ மறஅறம் ஜிம்னி ஆகிய கார்களுக்கு வெளிநாட்டில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டு விற்பனை அதிகமாகியுள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருமானமும் அதிகமாகியுள்ளது. இந்நிறுவனம மொத்தம் ரூ1,24,290 கோடி வருமாத்தை பெறஅறுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ1,06,258 கோடி வருமானத்தை பெற்றிருந்தது. அதே நேரம் லாபமும் அதிகமாகியுள்ளது. தற்போது லாபம் மட்டும் ரூ10,854 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டு ரூ10,440 கோடியாக இருந்தது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான விற்பனையிலும் புதிய உச்சத்தை அந்நிறுவனம் எட்டியுள்ளது. மொத்தம் 5,64,669 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான். செப்டம்பர் இறுதியில் வரிகுறைப்பு அமலுக்கு வந்த பிறகு விற்பனை ஏறியுள்ளதுஇதில் உள்நாட்டு விற்பனை மட்டும் 14,35,945 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 3,10,559 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஏற்றுமதியும் சிறப்பாக இருந்துள்ளது. முக்கியமாக பலேனோ மறஅறம் ஜிம்னி ஆகிய கார்களுக்கு வெளிநாட்டில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டு விற்பனை அதிகமாகியுள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருமானமும் அதிகமாகியுள்ளது. இந்நிறுவனம மொத்தம் ரூ1,24,290 கோடி வருமாத்தை பெறஅறுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ1,06,258 கோடி வருமானத்தை பெற்றிருந்தது. அதே நேரம் லாபமும் அதிகமாகியுள்ளது. தற்போது லாபம் மட்டும் ரூ10,854 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டு ரூ10,440 கோடியாக இருந்தது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான விற்பனையிலும் புதிய உச்சத்தை அந்நிறுவனம் எட்டியுள்ளது. மொத்தம் 5,64,669 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான். செப்டம்பர் இறுதியில் வரிகுறைப்பு அமலுக்கு வந்த பிறகு விற்பனை அதிகமாகியுள்ளது. இது தொடரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலாண்டில் மொத்தம் 6,67,769 வாகனங்கள் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றுமதிக்காக மட்டும் 1,03,100 வாகனங்கள் தயாரிக்கபப்ட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் காலாண்டு வருமானம் ரூ47,534 கோடியாக உள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலாண்டில் ரூ36,802 கோடி வருமானம் இருந்தது.


Click it and Unblock the Notifications









