திடீர்ன்னு டபுள் மடங்காக அதிகரித்த விற்பனை! என்ன அதிசயம் நடந்துச்சு தெரியுமா?
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமலுக்கு வந்தபிறகு வாகன விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. முக்கியமாக மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் எல்லாம் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி கடந்த 2025ம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 22 சதவீதம் அளவுக்கு மாருதி நிறுவனத்தின் விற்பனைகள் அதிகமாகியுள்ளது. அதில் குறிப்பாக சிறிய ரக கார்களின் விற்பனை குறித்து உங்களது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு மாருதி நிறுவனம் முதல் மூன்று காலாண்டுக்கான விற்பனை விபரங்களை பார்க்கும் போது அதாவது ஜனவரி முதல் செப்டம்பர் விபரங்களை பார்க்கும்போது கடந்த 2024ம் ஆண்டு நடந்த விற்பனையை விட மூன்று சதவீதம் விற்பனை குறைவாக தான் இருந்தது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது அதன் பிறகு வாகனங்களின் சிறிய ரக வாகன விற்பனவை கணிசமாக குறைந்தது.

ஜிஎஸ்டியால் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனத்தின் சிறிய ரக கார்கள் விற்பனை அதிகமாகியுள்ளது. மாருதி நிறுவனம் மினி செக்மென்ட்டில், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களை மட்டுமே விட தற்போது 92 சதவீதம் அளவுக்கு இந்த செக்மென்ட்டில் விற்பனை அதிகமாகியுள்ளது.
இதுமட்டுமல்ல கடந்த நவம்பர் மாதமும் 12, 347 வாகனங்கள் தான் விற்பனையாகிறது அதை ஒப்பிடும்போது 15 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது. இந்த ஒரு செக்மென்ட் மட்டுமல்ல காம்பேக்ட் செக்மெண்ட் வைத்துள்ளதை காண முடிகிறது. காம்பேக்ட் செக்மெண்டல் விற்பனை செய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 78,074 கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 54,906 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 43 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது. அதே நேரம் கடந்த நவம்பர் மாதம் 8 சதவீதம் விற்பனை அதிகமாகி உள்ளது.

மாருதி நிறுவனம் காம்பேக்ட் செக்மென்ட்டில் செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் எல்லாம் இந்தியாவில் பிரபலமான கார்களாக உள்ளன. இதில் ஹேட்ச்பேக், செடான், கார்கள் இருக்கிறது. விலையும் குறைவு என்பதால் விற்பனையாகி வருகிறது.
இதே போல காலாண்டு விற்பனையை ஒப்பிடும் போதும் முதல் காலாண்டில் சுமார் 4.85 லட்சம் கார்கள் விற்பனையாகி இருந்தது. இரண்டாம் காலாண்டில் 3.9 லட்சம் கார்களும் நான்காம் காலாண்டில் 4.01 இலட்சம் காரணம் விற்பனையாகி இருந்த நிலையில் 4ம் காலாண்டில் குறிப்பாக 5.25 லட்சம் எவ்வளவு காரின் விற்பனை அதிகரித்துள்ளது. கடைசி காலாண்டில் மட்டும் 22 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்து கடந்த நான்கு காலாண்டுகளில் மொத்தம் விற்பனை மூன்று சதவீதம் அளவிற்கு அதிகமாகி உள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறித்து அமலுக்கு வந்த பிறகுதான் இந்த அதிக எண்ணிக்கையிலான வாகன விற்பனை என்பது நடந்துள்ளது. இது இந்தியாவின் மார்க்கெட் விரிவுபடுத்தி உள்ளது. என்று சொல்லலாம் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றம் பூர்த்தி நிறுத்தும் வகையில் இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளதால் இந்த செக்மென்ட் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. இதனால் சிறியரக கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் சிறிய ரக கார்களை தயாரிப்பது பெரும் சவாலாக இருப்பதாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறிவந்தனர் . வரிக்குறைப்பு அவர்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்துள்ளது. இருந்தாலும் இன்னும் வரியை குறைக்கலாம் என்ற மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது 18 சதவீதமாக இருக்கும் வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை உள்ளது.


Click it and Unblock the Notifications









